ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்

Posted By:

Andhra Peerkangai Pachadi Recipe in Tamil: மதியம் சிம்பிளா அதிகம் மெனக்கெடாம சமையலை முடிக்க நினைக்கிறீங்களா? உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் உள்ளதா? அப்படியானால் அந்த பீர்க்கங்காயை வைத்து சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பச்சடி செய்யுங்கள். இந்த பக்குவத்தில் பீர்க்கங்காய் பச்சடி செய்யும் போது, அது சூடான சாதத்துடன் மட்டுமின்றி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

Andhra Peerkangai Pachadi Recipe How to Make at Home in Tamil

இந்த ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி செய்வதற்கு ஈஸியாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை எளிதாக செய்யலாம். முக்கியமாக இந்த பச்சடி நீங்கள் வழக்கமாக செய்வதை விட சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதால், பீர்க்கங்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் பீர்க்கங்காய் பச்சடி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 3 ஸ்பூன் கடலை எண்ணெய்
- 1/2 ஸ்பூன் எள்
- 1 ஸ்பூன் மல்லி விதை
- 2 ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை
- 1 ஸ்பூன் சீரகம்
- 4 பச்சை மிளகாய்
- 10 பல் பூண்டு
- 250 கிராம் பீர்க்கங்காய்
- 3/4 கப் வெங்காயம்
- 1 தக்காளி
- 10 கிராம் புளி
- தேவையான அளவு உப்பு
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகள்

தாளிக்க:

- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 ஸ்பூன் சீரகம்
- 2 காய்ந்த மிளகாய்
- 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு

செய்முறை:

- ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் கடலை எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும்.

- எண்ணெய் சூடானதும் அதில் தனியா மற்றும் எள் சேர்த்து நன்றாக வறுக்கவும். அதன்பின் சீரகம், வறுத்த வேர்க்கடலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

- அதே கடாயில் 5 பல் பூண்டு மற்றும் நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.

- பின்னர் வெங்காயம் சேர்த்து, அது கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

- தக்காளி மற்றும் புளி சேர்த்து, அவை நன்கு குழைந்து வரும் வரை வதக்கவும். அதன்பின் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.

- கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து, கலவையை ஆறவிடவும்.

- முதலில் வறுத்த உலர் பொருட்களை அரைத்துக்கொள்ளவும்.

- பின்னர் வதக்கிய ஈரமான பொருட்களைச் சேர்த்து மீண்டும் அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.

- ஒரு கடாயில் மீண்டும் கடலை எண்ணெயைச் சூடாக்கவும்.

- கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்துத் தாளிக்கவும்.

- பின் பூண்டு சேர்த்து, நல்ல வாசனை வரும் வரை வதக்கவும். பெருங்காயத் தூள் தூவி நன்றாகக் கலக்கவும்.

- இந்த தாளிப்பை அரைத்த பச்சடி மீது கொட்டி கிளறினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் பீர்க்கங்காய் பச்சடி ரெடி.

[ of 5 - Users]
Story first published: Thursday, July 23, 2026, 11:41 [IST]
Desktop Bottom Promotion