Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Clove Water Benefits In Tamil: நம் வீட்டு சமையலறையில் உடலுக்கு நன்மைகளை வழங்கக்கூடிய மருத்துவ குணம் வாய்ந்த ஏராளமான பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் கிராம்பு. இந்த கிராம்பு நல்ல மணத்துடன், காரத்தன்மையைக் கொண்ட ஒரு மசாலா பொருளாகும். இந்த சின்னஞ்சிறு கிராம்பு அளவில் சிறியதாக இருந்தாலும், எதிர்பாராத பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். அதுவும் இந்த கிராம்பை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் குடித்து வந்தால், பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?

அதுமட்டுமின்றி சமீப காலமாக மக்களிடையே மசாலாப் பொருட்களை நீரில் ஊற வைத்து குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஊட்டச்சத்து நிபுணரான நமாமி அகர்வால் கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிராம்பு நீரை தொடர்ந்து 10 நாட்கள் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியது பின்வருமாறு:
1. நுரையீரல் சுத்தமாகும்
கிராம்பு நீரை தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வரும் போது, முதலில் நுரையீரல் சுத்தமாகத் தொடங்கும். இதற்கு கிராம்பில் உள்ள யூஜினால் தான் காரணம். இது ஒரு சக்தி வாய்ந்த பொருள். இது நுரையீரலில் தேங்கியுள்ள சளியை குறைப்பதோடு, வீக்கத்தையும் குறைக்க உதவி புரியும்" என்று கூறினார். எனவே அடிக்கடி சளி தொல்லையால் சிரமப்படுபவர்கள் அல்லது மூச்சுவிடுவதில் சிக்கலை சந்திப்பவர்கள் இந்த கிராம்பு நீரைக் குடிப்பது நல்லது.
2. செரிமானத்திற்கு நல்லது
"கிராம்பு நீரைக் குடிப்பதால் கிடைக்கும் மற்றொரு நன்மை செரிமானம் சிறப்பாக நடக்கும். கிராம்பு நீர் செரிமான நொதிகளை அதிகரித்து உண்ணும் உணவுகளை எளிதில் உடைத்தெறிய உதவி புரிகிறது. இதன் மூலம் வயிற்று உப்புசம் ஏற்படுவது தடுக்கப்படும்" என்று கூறினார். ஆகவே அடிக்கடி செரிமான பிரச்சனையால் சிரமப்பட்டு வந்தால், கிராம்பு நீரை தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வாருங்கள். இதனால் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.
3. சருமம் பொலிவாகும்
"கிராம்பு நீரை தொடர்ந்து குடித்து வரும் போது சருமம் பொலிவாகத் தொடங்கும். ஏனெனில் கிராம்பில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளன. இது சருமத்தில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைத்து சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும் இது பற்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்." என்று கூறினார். ஆகவே உங்களின் சருமம் பொலிவோடும், பளிச்சென்றும் இருக்க நினைத்தால், கிராம்பு நீரை தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வாருங்கள்.
4. நல்ல தூக்கம் கிடைக்கும்
"கடைசியாக கிராம்பு நீரை குடிப்பதன் மூலம் நல்ல தூக்கம் கிடைக்கும். ஏனெனில் இது இயற்கையாகவே மெலடோனின் அளவை மேம்படுத்த உதவுகிறது. இது நரம்புகளை சாந்தமடையச் செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது" என்று கூறினார். ஆகவே இதுவரை நல்ல தூக்கத்தைப் பெற முடியாமல் சிரமப்பட்டு வந்தால், கிராம்பு நீரை தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வாருங்கள். ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications