Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
வாஸ்துப்படி வீட்டு வாசலில் இந்த அதிர்ஷ்ட பொருட்களை வையுங்க.. செல்வமும், மகிழ்ச்சியும் பெருகும்...
Vastu Tips In Tamil: நாம் ஒவ்வொருவருமே பிரச்சனை இல்லாத நல்ல மகிழ்ச்சியான மற்றும் நிம்மதியான வாழ்க்கையையே வாழ விரும்புகிறோம். அதற்காகவே அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், உங்கள் தொழிலில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காண முடியவில்லையா? உங்களின் வெற்றிக்கான பாதையில் பல தடைகளை சந்திக்கிறீர்களா?
அப்படியானால் நீங்கள் குடியிருக்கும் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. வாஸ்து குறைபாடுகளை கொண்ட வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் நிரம்பியிருக்கும். இதன் விளைவாக வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றத்தையும் காண முடியாது மற்றும் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் பிரதான நுழைவாயில் நல்ல அதிர்ஷ்டத்தின் நேர்மறை ஆற்றல் நுழையும் இடமாகும். இந்த இடத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் அதிர்ஷ்ட பொருட்களை வைப்பதன் மூலம், வீட்டில் மகிழ்ச்சி பெருகும் மற்றும் அந்த வீட்டில் உள்ளோரும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். இப்போது நல்ல அதிர்ஷ்டத்திற்கு வாஸ்துப்படி வீட்டு வாசலில் எந்த பொருட்களை வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
1. மாவிலை தோரணம்
வாஸ்துப்படி, வீட்டின் பிரதான நுழைவாயிலில் மாவிலை தோரணத்தை தொங்கவிடுவது மிகவும் நல்லது. இது வீட்டின் வாசலுக்கு ஒரு அழகான மற்றும் மங்களகரமான தோற்றத்தைக் கொடுப்பது மட்டுமல்லாமல், வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் நுழைவதைத் தடுக்கும் மற்றும் செழிப்பைக் கொண்டு வரும்.
2. லட்சுமி தேவியின் பாதச்சுவடுகள்
வீட்டின் வாசலில் லட்சுமி தேவியின் பாதச்சுவடுகளை வைப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் இந்த பாதச்சுவடை வைக்கும் போது, பாதங்களானது வீட்டை நோக்கியவாறு இருக்க வேண்டும். இப்படி வைப்பதனால் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி வீட்டிற்குள் வருவதைக் குறிக்கிறது. இந்த வகையான பாதச்சுவடுகளை வைப்பதன் மூலம், வீட்டில் உள்ள பணப்பிரச்சனைகள் நீங்கி, செல்வம் பெருகும் மற்றும் வீட்டில் உள்ளோர் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
3. சிவப்பு நிற ஸ்வஸ்திக்
அதிர்ஷ்டத்திற்காக வீட்டு வாசலில் வைக்க வேண்டிய மற்றொன்று தான் ஸ்வஸ்திக் சின்னம். இந்த ஸ்வஸ்திக் என்பது விநாயகரின் அடையாளமாகும். இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை வீட்டு பிரதான வாசல் கதவின் மையத்தில் வைக்கும் போது, அது வீட்டில் அமைதியை அதிகரிக்கிறது. ஒவ்வொரு வீட்டு உறுப்பினருக்கும் வெற்றிக்கான புதிய வழிகளைத் திறக்கிறது. ஆனால் ஸ்வஸ்திக் சின்னத்தை வாசலில் வைக்கும் போது, அந்த சின்னம் தெளிவாகவும், நேராகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் சிறப்பாக இருக்கும்.
4. செம்பு சூரியன்
வீட்டின் பிரதான நுழைவாயில் கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருந்தால், செம்பு சூரியனை வாசலில் தொங்க விடுவது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. சூரியன் மரியாதை மற்றும் பிரகாசத்தின் சின்னம். சூரியன் மரியாதை மற்றும் பிரகாசத்தின் சின்னம். வீட்டின் பிரதான நுழைவாயிலில் இதை வைப்பதன் மூலம், வீட்டில் உள்ளோர் வாழ்வில் சிறப்பான பலன்களைப் பெறுவதோடு, தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
5. மர பெயர்ப்பலகை
பொதுவாக வீடு கட்டியவர்கள் அந்த வீட்டிற்கு ஒரு பெயர் பலகையை வைப்பார்கள். வாஸ்துப்படி பெயர்ப்பலகையானது வீட்டு உரிமையாளரின் பெருமையையும், கண்ணியத்டிதையும் பிரதிநிதித்துவப்படுத்துவதால் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. ஆனால் அப்படி பெயர்ப்பலகையை வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சுத்தமான மற்றும் பளபளப்பான பெயர்ப்பலகை வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. எனவே வாசலில் வைக்கும் பெயர் பலகை, இருட்டாகவோ, உடைந்தோ இருக்கக்கூடாது. மேலும் வாஸ்துப்படி வீட்டு வாசலில் வைக்கும் பெயர்ப்பலகை மரத்தாலானதாக இருந்தால் இன்னும் சிறந்தது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications