Latest Updates
-
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா?
வாழைப்பூ வாங்குனா இந்த மாதிரி திருநெல்வேலி ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்
Vazhaipoo Kurma Recipe in Tamil: மதியம் ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவை செய்ய நினைக்கிறீங்களா? உங்கள் வீட்டில் வாழைப்பூ உள்ளதா? அப்படியானால் அந்த நெல்லை ஸ்டைல் வாழைப்பூவை வைத்து சூப்பரான குருமாவை செய்யுங்கள். இந்த பக்குவத்தில் வாழைப்பூ குழம்பு செய்யும் போது, அது சூடான சாதத்துடன் மட்டுமின்றி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். இது வழக்கமான வாழைப்பூ குழம்பு போல அல்லாமல் வித்தியாமான சுவையில் அட்டகாசமாக இருக்கும்.

இந்த நெல்லை ஸ்டைல் வாழைப்பூ குருமா செய்வதற்கு ஈஸியாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை எளிதாக செய்யலாம். முக்கியமாக இந்த குழம்பு நீங்கள் வழக்கமாக செய்வதை விட சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதால், வாழைப்பூ பிடிக்காதவர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். வாழைப்பூவை பொரியலாக சாப்பிட்டே போரடித்தவர்கள் இந்த குழம்பை முயற்சி செய்து பார்க்கலாம்.
உங்களுக்கு நெல்லை ஸ்டைல் வாழைப்பூ குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெல்லை வாழைப்பூ குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- வாழைப்பூ - 1
- சின்ன வெங்காயம் - 20(நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 1 (கீறியது)
- மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
- கொத்தமல்லித் தூள் - 1/2 ஸ்பூன்
- சீரகத் தூள் - 1/2 ஸ்பூன்
- தேங்காய்ப் பால் - 3/4 கப்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
- அரிசி மாவு - 1 ஸ்பூன்
செய்முறை:
- முதலில் வாழைப்பூவை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். சுத்தம் செய்த வாழைப்பூவை சமைக்கும் வரை மோரில் ஊற வைக்கவும். சமைக்கும் போது பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- தேங்காயைத் துருவி அரைத்து பால் எடுத்து அதில் முக்கால் கப் வெந்நீர் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெயைச் சூடாக்கி, சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் கீறிய பச்சை மிளகாயைச் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடிப் பதம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் சீரகத் தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.
- பின்னர் தேங்காய்ப் பாலை சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்க்கவும். தேங்காய்ப்பால் கொதிக்கத் தொடங்கும் போது மோரில் ஊற வைத்த வாழைப்பூவை சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து, காரம் மற்றும் சுவையைச் சரிபார்க்கவும். குறைந்த தீயில் ஒரு விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.
- அடுப்பை அணைத்துவிட்டு, ஆவி வெளியேறிய பிறகு குக்கரைத் திறக்கவும். எண்ணெய் மிதந்து வரும் போது நன்றாகக் கலக்கவும். குழம்பு மிகவும் தண்ணியாக இருந்தால், சிறிதளவு அரிசி மாவை தண்ணீரில் கரைத்து, குழம்பில் சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
- குழம்பு நன்கு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.



Click it and Unblock the Notifications
