Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
இரவு நேரத்தில் இந்த வேலைகளை செய்யாதீங்க.. இல்லன்னா லட்சுமி தேவி வீட்டை விட்டு போயிடுவாங்க...
ஒருவரது வாழ்க்கையை செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள் குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன. நமது வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால், நாம் குடியிருக்கும் வீடு வாஸ்து விதிகளின் படி இருப்பதோடு, நமது பழக்கங்களும் சரியாக இருக்க வேண்டும். ஆம், ஒருவரது பழக்கங்களும் அவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சிறு வயதில் இருந்து நம் வீட்டில் உள்ள பாட்டி மற்றும் அம்மாக்கள் மாலை வேளையில் நகங்களை வெட்டக்கூடாது என்று சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் இன்றைய தலைமுறையினர் பலர் அதை சற்றும் மதிக்காமல், அதெல்லாம் ஒன்றும் தவறில்லை என்று நடப்பதுண்டு. இப்படி நம் முன்னோர்கள் செய்யக்கூடாது என்று கூறும் பல விஷயங்களை பலரும் தற்போது பின்பற்றி வருகிறார்கள்.

குறிப்பாக இரவு நேரத்தில் செய்யக்கூடாது என்று கூறும் பலவற்றை பின்பற்றுகிறார்கள். சாஸ்திரங்களின் படி, இப்படி பின்பற்றுவதன் மூலம் வீட்டில் தீய சக்திகள் அதிகரிப்பதோடு, வீட்டில் குடியிருக்கும் லட்சுமி தேவி கோபமடைந்து வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறப்படுகிறது. மேலும் பாவம் சேரும் என்றும் கூறப்படுகிறது. இப்போது இரவு நேரத்தில் எந்த விஷயங்களை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.
நகங்களை வெட்டுவது
சாஸ்திரங்களின் படி, சூரியன் அஸ்தமனமான பின் இரவு நேரத்தில், ஆணோ, பெண்ணோ நகங்களை வெட்டக்கூடாது. அப்படி வெட்டினால், அது வீட்டிற்கு தரித்தித்தை கொண்டு வரும். வீட்டின் புண்ணியம் பறிபோகும். முக்கியமாக வீட்டில் பெரிய நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்.
பெர்ஃப்யூம் வேண்டாம்
வாஸ்துப்படி, இரவு நேரத்தில் ஆண்களோ, பெண்களோ பெர்ஃப்யூம் அடிக்கக்கூடாது. அப்படி வாசனை திரவியத்தை அடித்துக் கொள்வது, வீட்டில் எதிர்மறை அற்றலை அதிகரிக்கும். மேலும் இது ஒருவரது மனதில் தீய சக்திகளை அதிகம் ஆதிக்கம் செலுத்தத் தூண்டும். எனவே இதை செய்யாதீர்கள்.
கடன் கூடாது
பணத் தேவை அனைவருக்குமே எப்போதும் இருக்கக்கூடிய ஒன்று. ஆனால் பணத்தைக் கடன் வாங்க நினைத்தால், இரவு நேரத்தில் செய்யாதீர்கள். அதேப் போல் யாருக்கும் இரவு நேரத்தில் கடன் கொடுக்காதீர்கள். ஒருவேளை செய்தால், உங்கள் வீட்டில் தங்கியுள்ள லட்சுமி தேவி, வீட்டில் இருந்து வெளியேறுவார். எனவே இந்த தவறையும் செய்து விடாதீர்கள்.
துளசி இலையை பறிக்காதீர்
சாஸ்திரத்தின் படி, சூரியன் அஸ்தமனமான பின் துளசி இலைகளையோ, அரச மரை இலைகளையோ பறிக்கக்கூடாது. அப்படி பறித்தால், அது லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக்கி, வீட்டில் வறுமையைக் கொண்டு வரும். மேலும் வீட்டின் மகிழ்ச்சியும், அமைதியும் குறைந்து, வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
பாத்திரங்களை காலியாக வைக்காதீர்
இரவு தூங்கும் முன் சமையலறையில் உள்ள உணவுப் பாத்திரங்களை காலியாக வைத்திருக்கக்கூடாது. வாஸ்துப்படி, அப்படி காலி பாத்திரங்களை வைத்திருப்பது அசுபமாக கருதப்படுகிறது. அதுவும் இவ்வாறு வைத்தால், அன்னப்பூரணி தேவி மற்றும் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக்கிவிடும். இதன் விளைவாக வீட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதோடு, பண பிரச்சனையும் அதிகரிக்கும். அதேப் போல் இரவு நேரத்தில் தலை முடியை விரித்துப் போட்டு தூங்குவதும் நல்லதல்ல.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications