Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
குருபகவான் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
ஜோதிடத்தில் குருபகவான் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாகும். குருபகவான் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை அடிக்கடி மாற்றுகிறார். இந்த கிரக மாற்றம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏப்ரல் 20-ஆம் தேதி மாலை 4:43 மணிக்கு குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறது. இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக குருபகவான் இருப்பதால் இந்த பெயர்ச்சியானது மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த காலகட்டத்தில், குருபகவானின் தாக்கம் வலுவடையும் என்று நம்பப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் கூடுதல் அதிர்ஷ்டத்தையும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் வழங்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலுமே அவர்கள் மகத்தான நன்மைகளை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
குருபகவானின் இந்த நட்சத்திர மாற்றமானது மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது. அவர்கள் கடந்த காலத்தில் சந்தித்து வந்த பொருளாதார பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரலாம். இந்த கிரக மாற்றத்தால் வாகனங்கள் மற்றும் புதிய வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும் மற்றும் அலுவலகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
நிதிரீதியாக, இந்த காலம் மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கும். மூதாதையர் சொத்துக்கள் கைக்கு வருவதற்கும் மற்றும் கடன் பிரச்சினைகள் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. உங்கள் நிதித் திட்டங்கள் வெற்றிகரமாக இருக்கும், இது உங்கள் சேமிப்பை அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த கிரக மாற்றம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றம் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் புதிய வாசல்களைத் திறந்துவிடக்கூடும். கடந்த காலத்தில் தடைப்பட்டிருந்த வேலைகள் இப்போதும் மீண்டும் வெற்றிகரமாக முடிக்கப்படலாம். இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்கள் மிகப்பெரிய நன்மைகளைப் பெறலாம். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.
வியாபாரிகள் கடின உழைப்பு மற்றும் முயற்சியால், அவர்களின் தொழிலை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லலாம். இந்த காலகட்டத்தில் தனுசு ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடலாம். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு வாய்ப்புகளும் உள்ளன, மேலும் இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் குருபகவானின் இந்த மாற்றத்தால் மகத்தான நன்மைகளை அடையலாம். இந்த மாற்றத்தால் அவர்கள் வாழ்க்கையில் இருந்த பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இதுவரை கிடப்பில் போட்டிருந்த வேலைகளை முடிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும். அவர்கள் தங்கள் வீட்டிற்கு புதிய ஆடம்பரமான பொருட்களை வாங்க முடியும். அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.
திருமணமாகாதவர்கள் இப்போது அவர்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும். கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க முடியும், அவர்களின் தேர்வு முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
தனுசு
இந்த கிரகப் பெயர்ச்சியானது வேலை மற்றும் வணிகம் ஆகிய இரண்டிலும் புதிய வாய்ப்புகளைக் பெறலாம். வெளிநாடு சார்ந்த பணிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள். இதனால், அவர்கள் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணையாக இருக்கும், மேலும் அவர்களின் தொழில் வாழ்க்கையிலும் வெற்றி பெறுவார்கள். நீண்ட காலமாக அவர்களை துன்புறுத்தி வந்த பிரச்சினைகள் இப்போது முடிவடையும், மேலும் பல்வேறு செயல்பாடுகளை முடிக்க அவர்களின் ஆற்றல் துணையாக இருக்கும்.
அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருப்பதால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், மேலும் பல்வேறு துறைகளில் விரும்பியதை அடைய முடியும். மொத்தத்தில் இது அவர்களுக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

