Latest Updates
-
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் எது-ன்னு சொல்லுங்க.. உங்களோட குணத்தை சொல்றோம்.. -
வெயில் கொடுமையால் தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டையா? இந்த ஒரு விஷயத்தை மட்டும் மாத்துங்க, உறவு இனிக்கும்! -
சாணக்கிய நீதி படி ஆண்களிடம் நாயின் இந்த 5 குணங்கள் இருக்க வேண்டுமென்று பெண்கள் ஆசைப்படுவார்களாம் -
கோடை வெயிலால் முகம் கருப்பாகாம இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை வெச்சு ஃபேஸ் பேக் போடுங்க.. -
ஜூன் மாத குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
கர்நாடகா பேமஸ் வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணியை விட அட்டகாசமா இருக்கும் -
சுட்டெரிக்கும் வெயிலில் வீடு சூடாக இருக்கிறதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், வீடு ஜில்லுனு மாறும்! -
கொளுத்தும் கோடையில் நுங்கு நன்னாரி சர்பத் செஞ்சு குடிங்க.. உடல் சூடும் குறையும், தாகமும் தணியும்.. -
சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
இந்த 3 காய்கறிகளை மட்டும் எப்பவும் வெட்டிய உடனே சமைக்காதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! ஏன்னு பாருங்க..
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, உடல் எடை இருமடங்கு வேக வேகத்தில் குறையும்..
Summer Weight Loss Karuppu Kavuni Arisi Kanji Recipe In Tamil: இயற்கை நமக்கு அளித்த ஒரு அற்புதமான உணவுப் பொருள் தான் கருப்பு கவுனி அரிசி. இந்த அரிசியில் ஏராளமான நுண் ஊட்டச்சத்துக்களும், புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களும் அதிகம் உள்ளன. இந்த அரிசியைக் கொண்டு கஞ்சி தயாரித்து கோடைக்காலத்தில் குடிக்கும் போது, உடல் வலிமை அதிகரிப்பதோடு, உடலும் குளுகுளுவென்று இருக்கும்.
உடல் எடையைக் குறைக்க நினைப்போர், இந்த கஞ்சியை தினமும் காலையில் குடித்து வந்தால், நீண்ட நேரம் வயிறு நிரம்பி, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்கவும் உதவும். முக்கியமாக இப்படி கருப்பு கவுனியை கஞ்சி செய்தால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கருப்பு கவுனி அரிசியைக் கொண்டு எப்படி கஞ்சி செய்வதென்று கவிதா சமையலறை என்னும் யூடியூப் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு கருப்பு கவுனி அரிசி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு கவுனி அரிசி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கருப்பு கவுனி அரிசி - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு + 5 கப்
* பூண்டு - 4-5 பல் (தட்டியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மோர் - தேவையான அளவு
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் கருப்பு கவுனி அரிசியை நீரில் 2-3 முறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் சுத்தமான நீரை ஊற்றி, 8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 8 மணிநேரம் கழித்து நீரை வடிகட்டிவிட்டு, அரிசியை ஜாரில் போட்டு
கொரகொரவென்று ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் வைக்கும்படியான ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் 5
கப் நீர ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும்,
அரைத்த கருப்பு கவுனி அரிசியை சேர்த்து, அத்துடன் தட்டி வைத்துள்ள
பூண்டு பற்கள், சீரகம் மற்றும் வெந்தயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி ஓரளவு கெட்டியாகும் வரை கிளறி விட்டு வேக வைக்க
வேண்டும்.
* அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி, ஸ்டேண்ட்டை
வைத்து, அதன் மேல் அரிசி வெந்து கொண்டிருக்கும் பாத்திரத்தை வைத்து
மூடி, 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கவுனி அரிசி கஞ்சியை ஒரு
பாத்திரத்தில் போட்டு, அத்துடன் தேவையான அளவு மோரை சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும்
கறிவேப்பிலையை சேர்த்து நன்கு கிளறினால், சுவையான கருப்பு கவுனி அரிசி
கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications











