Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்...
Mappillai Samba Rice Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைப்பதற்காக டயட்டில் இருக்கிறீர்களா? இதற்காக காலையில் மிகவும் குறைவாக சாப்பிடுவதோ அல்லது எதையும் சாப்பிடாமலோ இருக்கிறீர்களா? அப்படியானால் இனிமேல் அப்படியெல்லாம் இல்லாமல், காலை வேளையில் கஞ்சி செய்து குடியுங்கள். அதுவும் மாப்பிள்ளை சம்பா அரிசி கஞ்சி உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது.
முக்கியமாக இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மேலும், இந்த கஞ்சியானது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. எடையைக் குறைக்க நினைப்போர் இந்த கஞ்சியை அடிக்கடி செய்து சாப்பிட்டால், உடல் எடையும், தொப்பையும் வேகமாக குறையும்.

உங்களுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழை மாப்பிள்ளை சம்பா அரிசி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்க்து கொள்ளுங்கள்
தேவையான பொருட்கள்:
* மாப்பிள்ளை சம்மா அரிசி - 1 கப் அல்லது 100 கிராம்
* தண்ணீர் - 4 கப் + 1 கப்
* வறுத்த வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* மோர் - சிறிது
* சின்ன வெங்காயம் - சிறிது (பொடியாக நறுக்கியது)
கொள்ளு துவையலுக்கு...
* கொள்ளு - 4 டீஸ்பூன்
* தேங்காய் - 2 பெரிய சில்லு
* வரமிளகாய் - 3
* பூண்டு - 5 பல்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் மாப்பிள்ளை சம்பா அரிசியை நீரில் 2 முறை நன்கு கழுவிக்
கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய அந்த அரிசியில் 4 கப் நீரை ஊற்றி, 4 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* 4 மணிநேரம் கழித்து, ஒரு பாத்திரத்தில் மாப்பிள்ளை சம்பா அரிசியை ஊற
வைத்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். அதற்குள் வறுத்த
வெந்தயத்தை ஒன்றிரண்டாக பொடித்து, கொதித்துக் கொண்டிருக்கும் நீரில்
போட வேண்டும்.
* அதன் பின் பூண்டு பற்களை தட்டிப் போட்டு கொதிக்க வைக்க
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் மாப்பிள்ளை சம்பா அரிசியை போட்டு, ரவை
பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த அரிசியை கொதித்துக் கொண்டிருக்கும் நீருடன் சேர்த்து,
சிறிது உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 5
நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு மூடியைத் திறந்து, தீயை உயர்த்தி, 1 கப் சுடுநீரை ஊற்றி
மீண்டும் 15 நிமிடம் கொதிக்க வைத்து, அரிசியை வேக வைத்து இறக்கி மூடி
வைத்து குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து இந்த கஞ்சிக்கு சைடு டிஷ்ஷாக கொள்ளு துவையலை செய்யுங்கள்.
அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளு பருப்பை சேர்த்து
பொன்னியமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த கொள்ளு விதைகள், தேங்காய், வரமிளகாய்,
பூண்டு, புளி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரைத் தெளித்து,
சற்று கெட்டியாக அரைத்துக் கொண்டால், சுவையான கொள்ளு துவையல்
தயார்.
* பின்னர் தயாரித்து வைத்துள்ள கஞ்சியை ஒரு கிண்ணத்தில் சிறிது
எடுத்து, அத்துடன் சிறிது மோரை ஊற்றி, பொடியாக நறுக்கிய சின்ன
வெங்காயத்தையும் சேர்த்து கலந்தால், மாப்பிள்ளை சம்பா அரிசி கஞ்சி
தயார்.



Click it and Unblock the Notifications