Latest Updates
-
1 மாம்பழமும், மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. அள்ளும்.. -
இந்த 4 ராசி ஆண்கள் மனைவி மீது உண்மையான அக்கறை செலுத்தும் அன்பான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 24 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டுள்ள நினைவுச்சின்னங்கள் என்னென்ன? அவை எங்கு உள்ளது தெரியுமா? -
புடலங்காயும், வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. சப்பாத்தி, சாதத்துக்கு அள்ளும்.. -
கண்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்.. -
கத்திரிக்காய் வாங்குனா இந்த அரைச்சுவிட்ட மசாலா குழம்பை ட்ரை பண்ணுங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த பழக்கங்களில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு வேகமாக வயது ஏறி முதுமை வந்துருமாம் -
ஜூலை 04-ல் சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்கு பணம், புகழ், வெற்றி எல்லாம் தேடி வரப்போகுது! -
பச்சை பயறு இட்லியும், கார மற்றும் தேங்காய் மல்லி சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்த 4 ராசிக்காரங்க அதிகாரத்தின் மீது பேராசை கொண்டவர்களாக இருப்பார்களாம்
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களிடமும் ஒரு தனித்துவமான ஆளுமை இருக்கும். அதேபோல ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சில பலமும், பலவீனமும் இருக்கும். அதிகாரத்தில் இருக்கும் வேண்டுமென்பது அனைவரிடமும் இருக்கும் ஒரு பொதுவான ஆசையாகும். ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் அதை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்துவார்கள், அதேபோல சில ராசிக்காரர்கள் அதிகாரத்தின் மீதான அவர்களின் ஆசையை மிகவும் ரகசியமாகவே வைத்திருப்பார்கள்.
இந்த ராசிக்காரர்கள் தங்கள் அதிகார வேட்கையை எப்போதும் வெளிக்காட்டாமல் இருக்கலாம், ஆனால் திரைமறைவில் சரியாகக் காய்களை நகர்த்தி அதிகாரத்தை கைப்பற்ற விரும்புவார்கள். அவர்களின் அமைதியான வெளித்தோற்றத்திற்கு அடியில், அனைத்தையும், அனைவரையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற ஆழ்ந்த தேவை ஒன்று ஒளிந்திருக்கிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிகாரத்தின் மீது ரகசியமாக பேராசைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அதிகாரத்தின் மீது தீவிர ஆறாம் கொண்டவர்கள், இருப்பினும் அவர்கள் பெரும்பாலும் தங்கள் ஆசைகளை மறைத்து வைக்கவே விரும்புவார்கள். மாற்றம் மற்றும் ஆற்றலின் கிரகமான புளூட்டோவால் ஆளப்படுவதால், விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பாகவே அனைவரையும் கட்டுப்படுத்துவதிலும், செல்வாக்கு மிக்கவராக இருப்பதிலும் ஈர்க்கப்படுகிறார்கள்.
மற்றவர்களின் நோக்கங்களைப் புரிந்துகொள்ளும் திறமை அவர்களுக்கு இயல்பிலேயே உண்டு, மேலும் இந்த அறிவைப் பயன்படுத்தி சூழ்நிலைகளைத் தங்களுக்கு எளிதில் சாதகமாகக் கையாள முடியும். அவர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தும் இடத்தில் இருக்க விரும்புவார்கள், மேலும் தங்களின் அதிகாரத்தை அனைவரும் அறிய வேண்டுமென்று விரும்புவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் வெற்றி மற்றும் சாதனை மீது ஆழ்ந்த விருப்பம் கொண்டவர்கள், இது பெரும்பாலும் அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டிற்கான தேவையாக வெளிப்படுகிறது. ஒழுக்கம் மற்றும் அதிகாரத்தின் கிரகமான சனியால் ஆளப்படுவதால், மகர ராசியினர் தங்கள் இலக்குகளை அடைவதில் திட்டமிட்டு, வியூகம் வகுத்துச் செயல்படுவார்கள்.
அவர்கள் தங்கள் லட்சியங்களை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள், ஆனால் மகர ராசியினர் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறுவதற்காக எப்போதும் திரைக்குப் பின்னால் அமைதியாக உழைத்துக் கொண்டிருப்பார்கள். மகர ராசியினரைப் பொறுத்தவரை, அதிகாரம் என்பது அமைதியாக அதேசமயம் நிச்சயம் அடைய வேண்டிய ஒன்றாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை நிறைந்த இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்களின் வசீகரமான தோற்றத்திற்கு பின்புறத்தில் அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டிற்கான ஒரு வலுவான ஆசை மறைந்துள்ளது. ஆற்றலின் அதிபதியான சூரியனால் ஆளப்படுவதால், சிம்ம ராசிக்காரர்களுக்கு தலைமை தாங்குவதற்கும் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதற்கும் ஒரு இயல்பான விருப்பம் உண்டு.
அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்கான விருப்பத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தினாலும், தாங்கள் எப்போதும் கவனத்தின் மையத்தில் இருப்பதை உறுதி செய்வதற்கான சரியான வழியைக் கண்டறிவார்கள். சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வசீகரத்தைப் பயன்படுத்தி மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதில் திறமையானவர்கள். அவர்கள் வெளிப்படையாக ஆதிக்கம் செலுத்துபவர்களாக வெளிக்காட்டாமல் இருக்கலாம், ஆனால் எளிதில் எந்த சூழலையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் பர்பெக்ட்டாக இருப்பது மீது தீவிர ஆர்வம் கொண்டவர்கள், அவர்கள் அதிகாரத்தின் மீதான பேராசையை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளா விட்டாலும், அவர்களால் அதிகாரத்தை ஒருபோதும் மறுக்க முடியாது. தகவல் தொடர்பு மற்றும் அறிவின் கிரகமான புதனால் ஆளப்படுவதால், கன்னி ராசிக்காரர்கள் அனைத்து விஷயத்தையும் கூர்ந்து கவனிப்பார்கள் மற்றும் காரியங்கள் சரியாகச் செய்யப்பட வேண்டும் என்ற வலுவான விருப்பத்தையையும் கொண்டிருப்பார்கள்.
இது பெரும்பாலும், அனைத்தும் தங்களின் உயர்ந்த எதிர்பார்ப்புகளைநிறைவேற்றுவதற்காக, சூழ்நிலைகளை அமைதியாகத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர அவர்களைத் தூண்டுகிறது. கன்னி ராசிக்காரர்கள் தங்கள் புத்திக்கூர்மை மற்றும் லாஜிக்கான சிந்தனை மூலம் மற்றவர்களைக் கட்டுப்படுத்துவதில் திறமையானவர்கள். அவர்களின் அமைதியான மற்றும் நிதானமான வெளித்தோற்றத்திற்குப் பின்னால், அவர்கள் அதிகாரத்தில் இருப்பதற்காக மிக நுணுக்கமாகத் திட்டமிடுகிறார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
