Latest Updates
-
புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு மூடப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
செப்டம்பரில் சனி-செவ்வாயால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
ஆந்திரா முட்டைக்கோஸ் பச்சடி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
தங்க நகைகள் ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி கொடுக்கப்படுகிறது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ் யூஸ் பண்ணுங்க.. -
அரிசி மாவும், தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
அமெரிக்க டாலரில் $ சின்னம் ஏன் உள்ளது தெரியுமா? அதன் அர்த்தமும், வரலாறும் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
Varalakshmi Vratam 2026: வரலட்சுமி விரதத்தின் போது டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்..
பலரும் அறியாத இந்திய மசாலா பொருட்களும், அவற்றின் ஆரோக்கிய நன்மைகளும்.!
Indian Spices And Their Health Benefits In Tamil: உலகிலேயே இந்திய உணவுகளின் சுவைக்கு இணையாக வேறு எந்த உணவு வந்துவிடாது. ஏனெனில் அந்த அளவில் இந்திய உணவுகள் ஆளை மயக்கும் வகையில் நல்ல மணத்துடனும், சுவையுடனும் இருக்கும். இப்படி இந்திய உணவுகள் சுவையாக இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பதே மசாலா பொருட்கள் தான்.
வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவில் இந்தியாவில் எண்ணற்ற மசாலா பொருட்கள் உள்ளன. இந்த மசாலா பொருட்கள் உணவுகளுக்கு நல்ல மணத்தையும், சுவையையும் தருவதோடு மட்டுமின்றி, ஏராளமான மருத்துவ குணங்களையும் கொண்டவை என்பது தெரியுமா?

பொதுவாக மசாலா பொருட்கள் என்றதும் அனைவருக்கும் நினைவிற்கு வருவது பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை என்பவையாகவே இருக்கும். ஆனால் இவற்றைத் தவிர பலரும் அறியாத உணவின் சுவை மற்றும் மணத்தை கூட்டும் வேறு சில மசாலா பொருட்களும் உள்ளன. இந்த ஒவ்வொரு மசாலாப் பொருளுக்கும் அதற்கே உரிய சிறப்பு மருத்துவ குணங்கள் உள்ளன. கீழே நிறைய பேர் அறிந்திராத சில இந்திய மசாலா பொருட்களும், அவற்றின் ஆரோக்கிய நன்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. காட்டு செலரி விதைகள்
ராதுனி என்னும் காட்டு செலரி விதைகள் மேற்கு வங்காளத்தில் மிகவும் பிரபலமானவை மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படுபவை. இந்த விதைகள் காரமானவை மற்றும் லேசான கசப்புத்தன்மை கொண்டவை. இந்த மசாலா பொருளானது செரிமானத்திற்கு உதவும் மற்றும் வயிற்று உப்புசத்தை குறைக்க பெரிதும் உதவி புரியும்.
2. கல்பாசி
மசாலா பொருட்களில் ஒன்றான கல்பாசி தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒன்றாகும். இந்த கல்பாசி உணவிற்கு நல்ல மணத்தைக் கொடுக்கக்கூடியது. முக்கியமாக செட்டிநாடு உணவுகளின் நறுமணத்திற்கு இந்த கல்பாசியும் ஒரு காரணம். இந்த கல்பாசியில் ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சிறுநீரக கற்களை தடுக்கவும் பெரிதுவும் உதவி புரியும். அதுமட்டுமின்றி, சுவாச பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது.
3. மராட்டி மொக்கு
மராட்டி மொக்கு என்பவை கபோக் மரத்தின் உலர்ந்த மொட்டுகளாகும். இந்த மராட்டி மொக்கு கர்நாடகா மற்றும் தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் அதிகம் பயன்படுத்தப்படும். கிராம்பு போன்று ஆனால் சற்று நீளமாக இருக்கும் இந்த மராட்டி மொக்கு உணவில் நல்ல மணத்தைக் கொடுக்கும். இப்படிப்பட்ட மராட்டி மொக்கு செரிமானத்தை ஆதரிக்கிறது மற்றும் ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
4. உலர்ந்த மாதுளை விதை
வடஇந்திய உணவுகளில் சேர்க்கப்படும் ஒரு மசாலா பொருள் தான் உலர்ந்த மாதுளை விதைகள். புளிப்பும், இனிப்பும் கலந்த இந்த மசாலா பொருள், உணவிற்கு புளிப்புசுவைக்காக பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன மற்றும் செரிமானத்தை ஆதரிக்கிறது.
5. காட்டு கடுகு விதைகள்
பொதுவாக சமையலில் தாளிக்க கடுகு பயன்படுத்துவோம். ஆனால் உத்தரகண்ட் பகுதிகளில் சமையலில் தாளிப்பதற்கு காட்டு கடுகு விதைகளை பயன்படுத்துவார்கள். இந்த கடுகு செரிமானத்திற்கு உதவுவதோடு, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவும்.
6. கொந்தோராஜ் எலுமிச்சை தோல்
கொந்தோராஜ் எலுமிச்சை தோலானது மேற்கு வங்காளம் மற்றும் அசாம் பகுதிகளில் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும். இந்த எலுமிச்சையின் தோல் சாதாரண எலுமிச்சையை விட, மிகவும் நறுமணமிக்கது மற்றும் தடிமனான தோலைக் கொண்டது. இதனால் இது உணவிற்கு தனித்துவமான நறுமணத்தைக் கொடுக்கும். முக்கியமாக இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
7. கற்பூரவள்ளி
நல்ல வாசனைமிக்க கற்பூரவள்ளி இலைகளானது தென்னிந்தியாவில் அதிகம் பன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். முக்கியமாக இந்த கற்பூரவள்ளியின் உலர்ந்த வடிவம் சமையலில் வாசனைக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும். மேலும் இந்த கற்பூரவள்ளி இலைகளானது சளி, இருமல், சுவாச பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க பயன்படுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

