Latest Updates
-
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். ..
தினமும் இரவு தூங்கும் முன் 2 கிராம்பு சாப்பிட்டு ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால் பெறும் நன்மைகள்!
Cloves And Hot Water Benefits: நம் வீட்டின் சமையலறையில் உள்ள மருத்துவ குணம் வாய்ந்த ஒரு பொருள் தான் கிராம்பு. இந்த கிராம்பு சமையலில் உணவிற்கு நல்ல மணத்தை தருவதோடு, உடலில் பல அற்புதங்களை நிகழ்த்தக்கூடியது.
ஆயுர்வேதத்தில் கிராம்பு பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக பல் வலி, தொண்டை வலி, வயிற்று கோளாறுகளுக்கு கிராம்பு ஒரு நிவாரண பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உருவத்தில் சிறியதாக இருக்கும் கிராம்பு, காரச் சுவையைக் கொண்டது. கிராம்பில் பல்வேறு மருத்துவ பண்புகள் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள யூஜினோல் என்னும் பொருள், மன அழுத்தம், வயிற்று பிரச்சனைகள், பர்கின்சன் நோய், உடல் வலி மற்றும் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கிறது.
இது தவிர கிராம்பில், வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தயமின், வைட்டமின் டி, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமல்லாமல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் நிறைந்துள்ளன.
இவ்வளவு சத்துக்கள் உள்ளடக்கிய கிராம்பை ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். ஆனால் அந்த கிராம்பை இரவு தூங்கும் முன் உட்கொண்டால், இரடிப்பு பலனைப் பெறலாம்.
கிராம்பை எப்படி உட்கொள்வது?
கிராம்பின் முழு சத்துக்களையும் பெற விரும்பினால், இரவு தூங்குவதற்கு முன் 2 கிராம்பை வாயில் போட்டு மென்று விழுங்கி, அதன் பின் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், பின்வரும் நன்மைகளைப் பெறக்கூடும். இப்போது அந்த நன்மைகள் எவையென்பதைக் காண்போம்.
* கிராம்பை இரவு நேரத்தில் உட்கொண்டு, சுடுநீரைக் குடிக்கும் போது, அது மலச்சிக்கல், அசிடிட்டி, வயிற்றுப் போக்கு போன்ற வயிற்று பிரச்சனைகளில் இரந்து நிவாரணம் அளிக்கிறது. கூடுதலாக, இது செரிமான மண்டலத்தை சரியாக செயல்பட செய்கிறது.
* கிராம்பில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளன. மேலும் இதில் குறிப்பிட்ட வகையான சாலிசிலேட் உள்ளன. இது முகத்தில் அசிங்கமாக வரும் முகப்பருக்கள் வருவதைத் தடுக்கும்.
* உங்களுக்கு பூச்சிப் பல் இருந்து, நீங்கள் பல் வலியால் அவதிப்பட்டு வந்தால், கிராம்பு சாப்பிட்டு சுடுநீரைக் குடித்தால், பல் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
* பொதுவாக கிராம்பை உட்கொண்டால், அது வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளும். எனவே நீங்கள் வாய் துர்நாற்ற பிரச்சனையால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தால், இரவு தூங்கும் முன் கிராம்பை உட்கொண்டு சுடுநீரைக் குடியுங்கள்.
* உங்களுக்கு கைகள் மற்றும் கால்களில் நடுக்கம் ஏற்படுகிறதா? அப்படியானால் இரவு தூங்கும் முன் 2 கிராம்பை சாப்பிட்டு, ஒரு டம்ளர் சுடுநீரை குடியுங்கள். இப்படி தினமும் உட்கொண்டு வந்தால், சில நாட்களிலேயே நல்ல பலனைக் காணலாம்.
* அடிக்கடி நோய்வாய்ப்பட்டு கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் கிராம்பை தினமும் இரவு உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாகும்.
* சளி, இருமல், சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், கிராம்பை தினமும் உட்கொள்வது நல்லது. இதனால் விரைவில் அப்பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதோடு, உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











