Latest Updates
-
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப நடிகை வைஷ்ணவியின் ஃபேஸ் பேக்கை போடுங்க!
Summer Skin Care Tips In Tamil: கோடைக்காலம் என்பதால் கொளுத்தும் வெயிலின் காரணமாக நிறைய சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் நிறைய பேர் சந்திக்கும் பிரச்சனைகள் என்றால் முகப்பரு, எண்ணெய் பசை சருமம், முக்கியமாக சரும நிற மாற்றம். இந்த பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால், கோடைக்காலத்தில் வழக்கத்தை விட கூடுதல் பராமரிப்பைக் கொடுக்க வேண்டும்.
முக்கியமாக சருமத்திற்கு பயன்படுத்தும் சன் ஸ்க்ரீன், மாய்ஸ்சுரைசர் போன்றவற்றை சரியானதாக தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். இது தவிர நம் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளை போட்டு வருவதன் மூலமும் கோடைக்கால சரும பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

நாம் வெயிலில் சிறிது நேரம் சென்றாலே, நமது சரும நிறம் மாறிவிடுகிறது. நடிகைகள் இந்த வெயில் காலத்தில் எப்படி தங்கள் சரும நிறம் மாறாமல் பாதுகாக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஒருவருக்குமே ஆவல் இருக்கும். அந்த வகையில் 'நாம் இருவர் நமக்கு இருவர்' என்னும் சீரியல் மூலம் மிகவும் பிரபலமான நடிகை வைஷ்ணவி வெயிலால் சரும நிறம் மாறாமல் இருக்க தான் பயன்படுத்தும் ஒரு நேச்சுரல் ஃபேஸ் பேக் குறித்து பகிர்ந்துள்ளார். அந்த ஃபேஸ் பேக் பின்வருமாறு:
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு - 1 டீஸ்பூன்
* தயிர் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எப்படி உதவுகிறது?
1. அரிசி மாவு - இந்த ஃபேஸ் பேக்கில் பயன்படுத்தப்படும் அரிசி மாவு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, அதிகப்படியான எண்ணெயை பசையையும் உறிஞ்சும். மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் பி3 ஆன நியாசினமைடு மற்றும் அலன்டோயின் ஆகியவை நிறைந்துள்ளன. இசை சருமத்தை பொலிவாக்குவதோடு, முகப்பருவைத் தடுக்கும், சருமத்தில் ஏற்படும் அழற்சியை தணிக்கும் மற்றும் வெயிலால் ஏற்படும் சரும கருமையை போக்கி, சரும நிறத்தை அதிகரிக்கும்.
2. தயிர் - தயிரில் லாக்டிக் அமிலம், புரோபயாடிக் மற்றும் புரதச்சத்து போன்றவை அதிகமாக உள்ளன. இவை சருமத்தை ஈரப்பதத்துடனும், பொலிவாகவும், நிற மாற்றத்தைக் குறைக்கவும், முகப்பருவைத் தடுக்கவும், வெயிலால் சருமத்தில் ஏற்படும் எரிச்சலை தணிக்கவும் உதவுகிறது. இந்த தயிரை தொடர்ந்து சருமத்தில் பயன்படுத்தும் போது, சரும அமைப்பு மேம்படுவதோடு, சருமத்திற்கு நல்ல பொலிவையும் தரும்.
3. மஞ்சள் தூள் - மஞ்சள் தூளில்குர்குமின் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது தவிர ஆன்டி-மைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இவை அனைத்தும் சருமத்தில் முகப்பருவைத் தடுப்பதோடு, கரும்புள்ளிகளைக் குறைக்கும், வெயிலால் சருமத்தில் ஏற்படும் அழற்சியை தணிக்கும் மற்றும் சருமத்திற்கு நல்ல பொலிவைத் தரும்.
பயன்படுத்தும் முறை:
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் அரிசி மாவு, 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஆகவே நீங்கள் வெயிலால் கருமையாகாமல் இருக்க நினைத்தால், சீரியல் நடிகை வைஷ்ணவி பயன்படுத்தும் இந்த அரிசி மாவு ஃபேஸ் பேக்கை அடிக்கடி பயன்படுத்தி, சரும நிறம் மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
