Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
கோடை வெயிலால் முகம் டல்லா, கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க..
Summer Skin Care Tips In Tamil: கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்படி வெயில் கடுமையாக கொளுத்தும் போது அதன் தாக்கம் முகத்தில் நன்கு தெரியத் தொடங்கும். இந்நிலையில் சருமத்திற்கு போதுமான பராமரிப்புக்களை கொடுக்க வேண்டியது அவசியம்.
குறிப்பாக வெளியே செல்லும் போது சூரியக் கதிர்கள் சருமத்தில் நேரடியாக படாதவாறு, சருமத்தை துணியால் கவர் செய்து கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் சருமம் எளிதில் நிறம் மாறி கருமையாகிவிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெயிலால் சருமத்தின் நிறம் மாறாமல் இருக்கவும், சருமம் நீரேற்றத்துடன் இருக்கவும், கோடைக்காலத்திற்கு ஏற்ற சில ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்த வேண்டும்.

அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு தினமும் சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் இருக்கும். கீழே கோடையில் முகத்தை பொலிவோடும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
1. வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு பாதி வெள்ளரிக்காயை ஜாரில் துண்டுகளாக்கி போட்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த கலவையை வெயிலில் அதிகம் படும் பகுதிகளான முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தை நீரேற்றத்துடனும், குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும்.
2. பப்பாளி மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த பப்பாளியை சிறிது எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கி, சரும நிறத்தை அதிகரித்து, சருமத்திற்கு பொலிவைத் தரும்.
3. தயிர் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
4. தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. எலுமிச்சை மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்றது. சென்சிடிவ் சருமத்தினர் இதை தவிர்ப்பது நல்லது.
* சிறப்பான பலனைப் பெற இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



