Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
கோடை வெயிலால் கருப்பாகாமல் இருக்கணுமா? அப்ப ஸ்கின் டாக்டர் சொல்ற இந்த 3 விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க!
Summer Skin Care Tips In Tamil: கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. அதுவும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. வெளியே சென்றாலே பொசுங்கி விடுவது போல் வெயில் கொளுத்துகிறது.
இப்படி வெளியின் தாக்கம் அதிகமாக இருப்பதால், சிறிது நேரம் வெளியே சென்றாலே, சருமம் நிறம் மாறிவிடுகிறது. சொல்லப்போனால் கோடைக்காலம் வந்துவிட்டாலே, நிறைய பேர் அடையாளம் தெரியாத அளவில் நிறம் மாறிவிடுவார்கள்.

நீங்களும் இப்படி கோடைக்காலம் வந்தாலே நிறம் மாறிவிடுவீர்களா? இந்த கோடையில் நீங்கள் நிறம் மாறாமல் இருக்கணுமா? அப்படியானால் தோல் மருத்துவரான டாக்டர் ஸ்வேதா ராகுல் தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறியுள்ள 3 விஷயங்களை தவறாமல் பின்பற்றுங்கள். இதன் மூலம், கோடையிலும் நீங்கள் நிறம் மாறாமல் அழகாக ஜொலிக்கலாம்.
1. சன்ஸ்க்ரீன் பயன்படுத்தவும்
"கோடை வெயிலால் சரும நிறம் மாறாமல் இருக்க வேண்டுமானால், குறைந்தது SPF 50, PA+++ கொண்ட சன்ஸ்க்ரீனை பயன்படுத்த வேண்டும். அத்துடன் அதில் ஜிங்க் ஆக்ஸைடு, டைட்டானியம் டை ஆக்ஸைடு இருக்க வேண்டும். இந்த சன்ஸ்க்ரீன் லோசனை வெளியே செல்வதற்கு 20 நிமிடத்திற்கு முன் சருமத்தில் தடவ வேண்டும். மேலும் வெளியே நீண்ட நேரம் இருந்தால் ஒவ்வொரு 3 மணிநேரத்திற்கும் ஒருமுறை சன்ஸ்க்ரீனை தவறாமல் பயன்படுத்த வேண்டும்" என்று கூறியிருந்தார்.
2. உடுத்தும் ஆடை
"கோடையில் நாம் உடுத்தும் உடையில் கவனம் செலுத்த வேண்டும். அதுவும் லைட்வெயிட்டுடன் கூடிய காட்டன் ஆடைகள் அல்லது லெனின் ஆடைகளை தேர்வு செய்து அணிய வேண்டும். முக்கியமாக வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும். அதோடு இந்த ஆடையானது சருமத்திற்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் உடல் முழுவதும் மறைத்தவாறு இருக்க வேண்டும்" என்று கூறினார்.
3. உள்ளிருந்து பாதுகாப்பளிக்க வேண்டும்
"உள்ளிருந்து பாதுகாப்பளிப்பது என்றால் லைகோபைன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். லைகோபைன் என்பது ஒரு ஓரல் சன்ஸ்க்ரீன். இந்த லைகோபைன் தக்காளி, தர்பூசணி போன்றவற்றில் அதிகம் உள்ளன. எனவே இந்த வகை உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து வர வேண்டும். அதோடு, வைட்டமின் சி நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். இவை உள்ளிருந்து உடலுக்கு பாதுகாப்பளிக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள 3 விஷயங்களை விட, கொளுத்தும் வெயில் நேரத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சூரியன் நேரடியாக உடலை தாக்கும் வகையில் வெயிலில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும்" என்றும் கூறினார்.
எனவே நண்பர்களே! நீங்கள் இந்த ஆண்டு கோடையில் உங்கள் சரும நிறம் மாறாமல் இருக்க நினைத்தால், டாக்டர் கூறிய இந்த விஷயங்களை தவறாமல் பின்பற்றுங்கள். இதனால் கோடையிலும் நீங்கள் அழகாகவும், பொலிவோடும் மின்னலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


