கேரள மக்கள் கெட்ட சகுனமாக நினைக்கும் சில விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

நம் நாட்டில் சகுனம் பார்க்கும் பழக்கம் இருப்பது வழக்கமான ஒன்று. குறிப்பாக தென்னிந்திய மக்கள் தான் அதிகமாக சகுனம் பார்ப்பார்கள். அதில் கெட்ட சகுனங்களாக பல பகுதிகளிலும் கருதப்படுவது பூனை குறுக்கே செல்வது.

உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஆனால் இதுப்போன்று விலங்குகளைக் கொண்டு ஏராளமான விஷயங்கள் கெட்ட சகுனங்களாக கருதப்படுகின்றன. இங்கு கேரளாவில் உள்ள மக்கள் விலங்குகளைக் கொண்டு கெட்ட சகுனங்களாக கருதும் சில விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கெட்ட சகுனம் 1

கெட்ட சகுனம் 1

ஒருவர் பசுவின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதைக் கண்டால், குடும்பத் தலைவர் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு வருவார் என்ற நம்பிக்கை கேரள மக்களின் மத்தியில் உள்ளது.

கெட்ட சகுனம் 2

கெட்ட சகுனம் 2

ஒருவர் நாய் செருப்பு, துணி அல்லது காய்ந்த எலும்புத் துண்டை வாயில் கவ்விக் கொண்டு ஓடுவதைக் கண்டால், அந்நாள் நல்ல நாளாக இல்லாமல் போவதோடு, அனைத்து காரியங்களும் தோல்வியிலேயே முடியுமாம்.

Image Courtesy

கெட்ட சகுனம் 3

கெட்ட சகுனம் 3

நாய் திடீரென்று வெவ்வேறு படியில் இருந்து வீட்டில் உள்ள பெண்ணைப் பார்த்தால், அந்த வீட்டில் யாரேனும் ஒருவர் நோய்வாய்ப்பட போகிறார் என்று அர்த்தமாம்.

கெட்ட சகுனம் 4

கெட்ட சகுனம் 4

நாய் அசாதாரண குரலில் வீட்டின் மேல் நின்று அழுதால், அந்த வீட்டில் ஒரு பெரிய ஆபத்து நேரிடப் போகிறது என்பதற்கு அறிகுறியாம்.

கெட்ட சகுனம் 5

கெட்ட சகுனம் 5

நடக்கும் போது வெள்ளை பூனை குறுக்கே சென்றால், உடல்நல குறைவால் பாதிக்கப்படப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

கெட்ட சகுனம் 6

கெட்ட சகுனம் 6

ஒரு வீட்டினுள் பூனை இறந்து போனால், அது கெட்ட சகுனமாகும்.

கெட்ட சகுனம் 7

கெட்ட சகுனம் 7

ஆந்தை வீட்டுக் கூரையின் மேல் அமர்ந்தாலோ அல்லது ஒருவரின் தலையின் மேல் அமர்ந்தாலோ, அந்த வீடு நாசமாகிவிடும்.

கெட்ட சகுனம் 8

கெட்ட சகுனம் 8

வெளியே புறப்படும் முன் பாம்பைக் கண்டால், கெட்ட சகுனமாம். இதேப் போல் வெள்ளை பாம்பைப் பார்த்தால் தீங்கு நேரும்.

கெட்ட சகுனம் 9

கெட்ட சகுனம் 9

கழுதை வலது பக்கமாக ஓலம் விடுத்தால், அது கெட்ட சகுனமாக கேரள மக்களிடையே கருதப்படுகிறது.

கெட்ட சகுனம் 10

கெட்ட சகுனம் 10

இரண்டு ஆந்தைகள் ரொமான்ஸ் செய்வதைப் பார்த்தால், ஆயுர் குறையுமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unlucky Omens In Kerala: What Animals Tell Us

Here are some inauspicious omens and their meaning in Kerala. Read on to know more...
Subscribe Newsletter