ஏன் வடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இந்தியாவில் சரியான காரணம் ஏதும் தெரியாமல் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள் ஏராளம். ஆனால் அப்படி பின்பற்றப்படும் ஏராளமான பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் காரணம் இருக்கும்.

தூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க சொல்கிறார்கள் என்று தெரியுமா?

அப்படிப்பட்ட பழக்கவழக்கங்களில் ஒன்று தான் வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூடாது என்பது. நிச்சயம் ஒவ்வொருவரது வீட்டில் இருக்கும் பெரியோர்களும் வடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்காதே என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அது ஏன் என்று தெரியுமா?

நீங்க தூங்குற 'லட்சணத்திலேயே' உங்க பெர்சனாலிட்டியை தெரிஞ்சுக்கலாமாம்...!

இங்கு ஏன் ஒருவர் படுக்கும் போது வடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூடாது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் காரணத்துடன் அப்பழக்கத்தைப் பின்பற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காந்தம்

காந்தம்

காந்தமானது இரும்பு, செம்பு போன்ற உலோகப் பொருட்களை ஈர்க்கும் தன்மை கொண்டது என அனைவரும் அறிவோம். அதேப் போல் காந்தத்திற்கு இரு துருவங்கள் உள்ளன. அவை வட துருவம் மற்றும் தென் துருவம்.

காந்தத்தின் இயல்பு

காந்தத்தின் இயல்பு

காந்தங்களின் இரண்டு ஒரே மாதிரியான துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்கும். அதுவே எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் தன்மை கொண்டவை.

காந்தத்தன்மை கொண்ட பூமி

காந்தத்தன்மை கொண்ட பூமி

சூரியனின் அதிகப்படியான வெப்பத்தினால் பூமியின் கிழக்குப் பகுதி சூடாகவும், மேற்கு பகுதி குளிர்ச்சியுடனும் உள்ளதால், வலிமையான மற்றும் வெப்பமான மின்னோட்டம் கிழக்குத் திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி உருவாக்கப்படுகிறது. இவ்வாறு உருவான மின்னோட்டத்தின் திசைக்கு வலது பக்கத்தில் உள்ள வடக்கு திசை நேர் மின்னோட்டத்தையும், இடது பக்கத்தில் உள்ள தெற்கு திசை எதிர் மின்னோட்டத்தையும் பெறுகிறது. இதன் காரணமாக பூமி ஓர் காந்தமானது. சூரிய வெப்பத்தினால் காந்தமான பூமி தன்னைத் தானே சுற்றுவதாலும் காந்த சக்தியைப் பெறுகிறது.

காந்தப் பொருளான மனிதன்

காந்தப் பொருளான மனிதன்

மனிதனின் உடலில் உள்ள இரத்தமானது சிவப்பணுக்கள், வெள்ளையணுக்களைத் தன்னுள் கொண்டது. இதில் சிவப்பணுக்களின் உற்பத்திக்கு இரும்புச்சத்து தேவைப்படுவதால், மனித உடலில் இரும்புச்சத்துக்கள் உள்ளன. இந்த இரும்புச்சத்துக்கள் காரணமாகத் தான் மனிதன் பூமியால் ஈர்க்கப்படுகின்றான்.

பூமி Vs மனிதன்

பூமி Vs மனிதன்

பூமியின் வட துருவத்தில் நேர் மின்னோட்டமும், தென் துருவத்தில் எதிர் மின்னோட்டமும் உள்ளது என்று பார்த்தோம். அதேப் போல் எதிர் எதிர் துருவங்கள் தான் ஒன்றையொன்று ஈர்க்கும் என்றும் பார்த்தோம். அந்த வகையில் மனிதனின் தலை நேர் மின்னோட்டமும், கால் எதிர் மின்னோட்டமும் கொண்டது.

தெற்குப் பகுதியில் தலை

தெற்குப் பகுதியில் தலை

மனிதன் தூங்கும் போது தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்குப் பக்கம் கால் நீட்டித் தூங்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும். அதாவது மின்னோட்டமானது சீரான நிலையில் இருக்கும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வடக்கு பகுதியில் தலை

வடக்கு பகுதியில் தலை

ஆனால் வடக்குப் பக்கம் தலை வைத்து, தெற்கு பக்கம் கால் நீட்டிப் படுப்பதால், மின்னோட்டங்களுக்கிடையே இடையூறு ஏற்பட்டு, அதனால் உடலின் ஆற்றல் சீர்குலைந்து, இத்திசையில் படுக்கும் போதெல்லாம் உடல்நலத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிகிறது. இதன் காரணமாகத் தான் வடக்குப் பக்கம் தலை வைத்து படுக்காதே என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sleeping Positions: Why North Is Not The Best Direction

Do you know why not to sleep with your head towards north? Read on to know more...
Subscribe Newsletter