உலக நாடுகளிடம் இருந்து பிரிட்டிஷ் திருடிய விலைமதிப்பற்ற பொருட்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

16-ம் நூற்றாண்டில் இருந்து பிரிட்டிஷ்-ன் ஆட்சி உலகம் முழுவதும் பெரும் ஆதிக்கத்துடன் பரவியது. சூரிய அஸ்தமனம் இல்லாத சாம்ராஜியம் என்ற பெயரும் புகழும் கொண்டிருந்தது. ஏனெனில், உலகின் ஓர் மூலையில் இருந்து மற்றொரு மூலை வரை இவர்களது ஆட்சி எல்லை பரவியிருந்தது.

வர்த்தகம் என்ற பெயரில் நுழைந்து பல நாடுகளை அடிமைப்படுத்தியது பிரிட்டிஷ். இவர்களது பிடியில் இந்தியாவும் சிக்கியது. அன்றைய எகிப்து, கிரேக்கம், இந்தியா போன்ற பகுதிகளில் தான் உலகின் பல விலைமதிப்பற்ற மற்றும் பொக்கிஷமான பொருட்கள் இருந்தன.

உலக புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை சூழ்ந்திருக்கும் மர்மங்களும்.. வரலாற்று குறிப்புகளும்..

அவற்றில் பெரும்பாலான பொருட்களை பிரிட்டிஷ் பறித்து சென்றது என்பதை விட ஆட்சி அதிகாரம் என்ற பெயரில் திருடி சென்றது என்று தான் கூற வேண்டும். இன்று அவை எல்லாம் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தை அலங்கரித்து வருகின்றன. ஆனால், அதன் உரிமையாளர்கள் வேற்று நாட்டவர்.

இவற்றில் மிகவும் அரியதாக கருதப்படும் மூன்று பொருட்கள் பற்றி இனிக் காண்போம்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரொசெட்டா கல், எகிப்து

ரொசெட்டா கல், எகிப்து

எகிப்தின் ரொசெட்டா எனும் பகுதியில் பிரெஞ்சு அதிகாரி ஒருவரால் கண்டெடுக்கப்பட்ட 2,200 ஆண்டுகள் பழமையான கருப்பு கருங்கல் இது. பழங்கால எகிப்தியரின் சித்திர வடிவ எழுத்துக்கள் பற்றிய ஆய்வுக்கு இந்த கருங்கல் உதவுகிறது.

Image Courtesy

ரொசெட்டா கல், எகிப்து

ரொசெட்டா கல், எகிப்து

இந்த பாறையில் நிறைய தகவலகள் இருக்கின்றன. பிரிட்டிஷ் பிரெஞ்சை தோற்கடித்த போது இந்த கருங்கல் அவர்களிடம் இருந்து பறித்து பிரட்டிஷ் அருங்காட்சியகத்தில் 1802-ம் ஆண்டு வைக்கப்பட்டது.

Image Courtesy

ரொசெட்டா கல், எகிப்து

ரொசெட்டா கல், எகிப்து

இந்த கல்வெட்ட்டில், பலவித வரி நீக்கங்கள் பற்றியும், கோயில்களில் சிலைகள் அமைப்பது குறித்த விதிமுறைகளை பற்றியும் கூறப்பட்டுள்ள ஒரு ஆணையாகும். இது ஐந்தாம் தொலெமியினால் வெளியிடப்பட்டது.

Image Courtesy

ரொசெட்டா கல், எகிப்து

ரொசெட்டா கல், எகிப்து

இந்த கருங்கல் கிரனோடியொரைட்டு (granodiorite) என்னும் கல்வகையைச் சேர்ந்தது ஆகும்.

Image Courtesy

எல்ஜின் மார்பிள்ஸ், கிரீஸ்

எல்ஜின் மார்பிள்ஸ், கிரீஸ்

இந்த மார்பிள்ஸ் கற்கள் ஏதென்ஸ்-ல் உள்ள பார்த்தினனிலும் பிற கட்டிடங்களிலும் இருந்து கழற்றி எடுக்கப்பட்ட ஒரு தொகுதி செந்நெறிக்காலக் கிரேக்கச் சிற்பங்கள், கல்வெட்டுக்கள், கட்டிடக் கூறுகள் போன்றவற்றைக் குறிக்கும்.

Image Courtesy

எல்ஜின் மார்பிள்ஸ், கிரீஸ்

எல்ஜின் மார்பிள்ஸ், கிரீஸ்

எல்கினின் ஏழாவது ஏர்ல், தாமசு புரூசு என்பவர் 1799க்கும் 1803க்கும் இடைப்பட்ட காலத்தில் ஓட்டோமான் பேரரசில் பிரித்தானியாவுக்கான தூதராக இருந்தார். இவர் பார்த்தினனில் இருந்து கூறுகளைக் கழற்றி எடுப்பதற்கான சர்ச்சைக்கு உரிய அனுமதி ஒன்றை ஓட்டோமான் அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

Image Courtesy

எல்ஜின் மார்பிள்ஸ், கிரீஸ்

எல்ஜின் மார்பிள்ஸ், கிரீஸ்

கிரேக்க நாட்டின் பண்டையக் காலத்து மார்பிள் இது. இதை பார்த்தினன் மார்பிள்ஸ் என்றும் கூறுகிறார்கள். 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விலைமதிப்பற்ற இந்த மார்பிள்ஸ் ஏதென்ஸ்-ல் இருந்து பிரிட்டிஷ்க்கு எடுத்துவரப்பட்டது. 1816-ம் ஆண்டிலிருந்து இந்த மார்பிள்ஸ் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் தான் இருக்கிறது.

Image Courtesy

கோஹினூர் வைரம், இந்தியா

கோஹினூர் வைரம், இந்தியா

கோஹினூர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் குண்டூர் மாவட்டம் கொல்லூர் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது. இது வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு இந்து, முகலாயர், பெர்சியர், ஆப்கன், சீக்கியர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் சண்டையிடப்பட்டு கைவசமாக்கப்பட்டது.

கோஹினூர் வைரம், இந்தியா

கோஹினூர் வைரம், இந்தியா

கிழக்கிந்தியக் கம்பெனியின் மூலமாக கைப்பற்றப்பட்டு, 1877 ஆம் ஆண்டில் மகாராணி விக்டேரியாவை இந்தியாவின் பேரரசியாக அறிவித்த போது பிரிட்டிஷ் அரச ஆபரணங்களின் பகுதியானது.

கோஹினூர் வைரம், இந்தியா

கோஹினூர் வைரம், இந்தியா

கோஹினூர் என்பதன் பொருள் "மலையின் ஒளி" என்பதாகும். ஒரு காலத்தில் உலகில் அதிகம் அறியப்பட்ட வைரமாக இருந்த 105 கேரட் (21.6 கிராம்) வைரம் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Priceless Artifacts Of Other Countries That Placed In British Museum

Priceless Artifacts Of Other Countries That Placed In British Museum,
Please Wait while comments are loading...
Subscribe Newsletter