Latest Updates
-
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்!
தமிழ் புத்தாண்டில் உருவாகும் அசுப யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படலாம்!
Tamil New Year 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அடிக்கடி ராசியை மாற்றி மனித வாழ்க்கையிலும், பூமியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ராசியை மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இப்படி மேஷ ராசியில் சூரியன் நுழைவதால் தமிழ் மாதமான சித்திரை பிறக்கவுள்ளது. அதோடு புதிய தமிழ் ஆண்டான பராபவ வருடம் பிறக்கப் போகிறது. மேலும் மேஷ ராசிக்குள் நுழையும் காலத்தில் மேஷ சங்கராந்தி என்றும் அழைப்பர். இந்த சங்கராந்தி சந்தோஷத்தை விட அதிக எச்சரிக்கைகளையே கொண்டு வருகிறது.

ஏனெனில் ஜோதிட கணக்கீடுகளின் படி, இந்த நாளில் சூரியன் மற்றும் சந்திரனின் நிலையால் வைத்ருதி யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது மிகவும் அசுப யோகமாகும். அதுவும் இந்த யோகம் மே 14 ஆம் தேதி வரை நீடித்திருக்கும்.
இதன் விளைவாக திடீரென்று பல அசம்பாவிதங்கள் நடக்கும், தகராறு, வாக்குவாதங்கள் மற்றும் நிதி இழப்புக்களும் ஏற்படக்கூடும். இப்போது தமிழ் புத்தாண்டில் உருவாகும் வைத்ருதி யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்வதால், இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல மோசமான விளைவுகளை சந்திப்பார்கள். இக்காலத்தில் புதிய முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்புக்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சனைகளால் சிரமப்படக்கூடும். அதுவும் தலைவலி, மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவை சிரமப்படுத்தும். வாயைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அன்புக்குரியவர்களுடனான உறவில் விரிசல் ஏற்படலாம்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால், இந்த ராசிக்காரர்களின் பொறுமை அதிகமாக சோதிக்கப்படும். பண பரிவர்த்தனைகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். குறுக்கு வழியில் பணத்தை சம்பாதிப்பதைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால், இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். குடும்பத்தில் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். இக்காலத்தில் புதிய விஷயங்களை அல்லது வேலைகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. மற்றவர்களின் ஆலோசனைகளைப் புறக்கணிக்காதீர்கள். இல்லாவிட்டால் உங்கள் பெயர் தான் பாழாகும்.
மோசமான விளைவுகளை தவிர்ப்பதற்கான பரிகாரங்கள்
வைத்ருதி யோகத்தினால் சந்திக்கும் மோசமான விளைவுகளைத் தவிர்க்க ஒருசில பரிகாரங்கள் உள்ளன. அவற்றை செய்தாலே எதிர்மறை தாக்கத்தைக் குறைக்கலாம்.
* சிவபெருமானுக்கு பால் அல்லது கங்கை நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
* ஓம் நமசிவாய அல்லது மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
* செவ்வாய்க்கிழமைகளில் அனுமன் சாலிசாவை பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* பஞ்சமுகி ருத்ராட்சத்தை அணிவது மனத்திற்கு அமைதியைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


