Latest Updates
-
December 2026 Horoscope: டிசம்பர் மாதத்தில் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
செட்டிநாடு கத்திரிக்காய் அவியல் குழம்பு ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
வார ராசிபலன் ( November 22-28)- இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்கள பிரச்சினைகள் விடாம துரத்தப்போகுதாம் -
சிக்கன் வாங்குனா இந்த பாலக்காடு சிக்கன் வறுவலை செஞ்சு பாருங்க - எவ்வளவு செஞ்சாலும் பத்தாது -
தேங்காயில் மூன்று கண்கள் இருப்பதற்கு பின்னால் உள்ள அறிவியல் ரகசியம் என்ன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
நவம்பர் 25-ல் கன்னி ராசிக்குள் நுழையும் செவ்வாய் இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளையும் கொடுக்கப்போகுதாம் -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி ராஜஸ்தான் ஸ்டைலில் வறுவல் செஞ்சு பாருங்க - பைவ் ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
1800 கோடிக்கு விற்கப்பட்ட ஹிட்லர் காலத்து அதிசய ஓவியம் - இந்த ஓவியத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
காலையில் இந்த ஒரு குழம்பை செஞ்சா போதும்... 3 வேளையும் வெச்சு சாப்பிடலாம்... -
நவம்பர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம்
ஜோதிடத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். எனவே மற்ற கிரகங்களின் பெயர்ச்சியை விட சூரியனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜூலை மாதத்தில் சூரியன் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றப்போகிறார். ஜோதிடரீதியாக இது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஜூலை 20 ஆம் தேதி சூரியன் பூச நட்சத்திரத்திற்குள் நுழையப்போகிறார், மேலும் ஆகஸ்ட் 03 ஆம் தேதி வரை அதே நிலையில் நீடித்திருப்பார். இந்த கிரக பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலித்தாலும் சில ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர மாற்றத்தால் சிறப்பான பலன்களை அடையப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி அதிர்ஷ்டத்தையும், முன்னேற்றத்தையும் கொடுக்கப்போகிறது. பொருளாதாரரீதியாக இது மிகவும் சிறப்பான காலகட்டமாக இருக்கும், மேலும் கடந்த காலத்தில் தடைப்பட்டிருந்த வேலைகளை இப்போது வெற்றிகரமாக தொடங்கலாம். வேலையில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.அந்த பொறுப்புகள் சற்றுச் சவாலாகத் தோன்றினாலும், அவை அவர்களின் திறமையை நிரூபிக்கும் வாய்ப்புகளைக் கொடுக்கும்.
புதிய முதலீடுகளை செய்வதற்கு இது சரியான காலமாகும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி லாபங்களை பெற வேண்டிய நேரமிது. ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும், கடுமையாக உழைக்க உறுதுணையாக இருக்கும். குடும்பத்தினரிடமிருந்து முழுமையான ஆதரவு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் வாழ்க்கையில் நிலவும் பெரும்பாலான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதியாக சூரியன் இருப்பதால் இந்த காலகட்டத்தில் அவர்கள் நேரடி பலன்களைப் பெறப்போகிறார்கள். இந்த யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களின் பொருளாதார நிலையில் பெரும் முன்னேற்றம் இருக்கும். அவர்கள் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து புதிய வருமானங்களை எதிர்பார்க்கலாம். வேலையில் புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படலாம் மற்றும் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.
நீண்ட காலமாக வேலை தேடுபவர்களுக்கு இந்த காலகட்டம் பலனளிக்கும் காலமாக இருக்கும். இது அவர்களின் லட்சியங்களை சிரமமின்றி அடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், புரிதலும் அதிகரிக்கும், மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய முதலீடுகள் செய்வதற்கான சிறந்த நேரமாக இது இருக்கும். குழந்தைகள் மூலம் சில நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அவர்களின் அனைத்து முயற்சிகளும் அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் நேர்மறையான பலன்கள் கிடைக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் தனுசு ராசிக்காரர்கள் தாங்கள் கடன் கொடுத்த பணத்தை மீட்டெடுக்கலாம் மற்றும் சேமிப்பை குறிப்பிட்ட அளவை உயர்த்த முடியும். இந்த காலகட்டத்தில் சமூகத்தில் அவர்களின் மரியாதையும், நற்பெயரும் அதிகரிக்கும். அவர்கள் குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிட முடியும், மேலும் அவர்களின் முயற்சிகள் பணியிடத்தில் பாராட்டப்படும்.
வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும், மேலும் பல்வேறு முதலீடுகளிலிருந்து பெரிய அளவில் சம்பாதிக்கலாம். அவர்களின் நீண்டகால ஆசைகள் அனைத்தும் இப்போது நிறைவேறும். திருமண வாழ்க்கையில், மகிழ்ச்சி இருக்கும். ஆரோக்கியம் தன்னிறைவாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

