Latest Updates
-
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: கருந்திட்டுக்கள் என்பது சருமத்தின் குறிப்பிட்ட பகுதி மட்டும் மற்ற பகுதியை விட கருமையாக இருக்கும் ஒரு தோலை நிலையாகும். இதை ஆங்கிலத்தில் ஹைப்பர்பிக்மென்டேஷன் என்று அழைப்பர். இது அதிகப்படியான மெலனின் சருமத்தில் உற்பத்தி செய்யப்படும் போது நிகழ்கிறது.
பெரும்பாலும் இந்த கருந்திட்டுக்களானது சூரியனின் புறஊதாக் கதிர்கள் சருமத்தில் படும் போது, சருமத்தில் மெலனின் உற்பத்தி அதிகரித்து ஏற்படும். இது தவிர ஹார்மோன் மாற்றங்களால், முகப்பரு தழும்புகள் போன்றவற்றாலும் ஏற்படலாம். இது ஒருவரது அழகையே கெடுக்கும் வகையில் இருக்கும்.

உங்களுக்கும் இந்த ஹைப்பர்பிக்மென்டேஷன் பிரச்சனை உள்ளதா? இதைப் போக்க எத்தனையோ க்ரீம்களை வாங்கி பயன்படுத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லையா? மாறாக சருமம் தான் அதிகமாக சேதமடைந்துள்ளதா? அப்படியானால் இயற்கை வழிகளை ட்ரை செய்து பாருங்கள்.
இயற்கை வழிகளை முயற்சிப்பதன் மூலம், சருமத்தில் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது மற்றும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். இப்போது சருமத்தில் உள்ள கருந்திட்டுக்களை போக்கும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.
1. ஆப்பிள் சீடர் வினிகர்
* ஆப்பிள் சீடர் வினிகரில் அசிட்டிக் அமிலம் இருப்பதால், இது சருமத்தில் உள்ள கருந்திட்டுக்கள் மறைய உதவி புரியும்.
* அதற்கு 1 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 2 ஸ்பூன் நீரை எடுத்து கலந்து, அதை கருந்திட்டுக்கள் உள்ள பகுதியில் தடவி 1-2 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் ஒரு முறை பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.
2. கற்றாழை
* கற்றாழையில் அலோயின் உள்ளது. இது கருமையான திட்டுக்களைப் போக்க உதவும்.
* அதற்கு கற்றாழை ஜெல்லை கருந்திட்டுக்கள் உள்ள இடத்தில் இரவு தூங்கும் முன் தடவி, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் கருந்திட்டுக்கள் மறையும் வரை கற்றாழை ஜெல்லை பயன்படுத்துங்கள்.
3. எலுமிச்சை சாறு மற்றும் தேன்
* எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி கரும்புள்ளிகளைக் குறைக்க பெரிதும் உதவி புரியும்.
* அதற்கு ஒரு பௌலில் எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* முக்கியமாக எலுமிச்சையை எப்போதும் நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக்கூடாது. எப்பவும் நீரில் கலந்து தான் பயன்படுத்த வேண்டும்.
4. பால்
* பாலில் லாக்டிக் அமிலம் உள்ளன. இதுவும் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் ஆற்றலைக் கொண்டது.
* அதற்கு காய்ச்சாத பச்சை பாலை பஞ்சுருண்டையில் நனைத்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.
* இப்படி தினமும் 2 முறை பயன்படுத்த நல்ல மாற்றத்தைக் காணலாம்.
5. வெங்காய சாறு
* சிவப்பு வெங்காயம் சருமத்தில் உள்ள கருந்திட்டுக்களைப் போக்க பெரிதும் உதவி புரியக்கூடியது.
* அதற்கு வெங்காயத்தை அரைத்து, அதன் சாற்றினை கருந்திட்டுக்கள் உள்ள இடத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வர, சருமத்தில் உள்ள கருந்திட்டுக்கள் மறைவதைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
