Latest Updates
-
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த மணமணக்கும் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும்
Kothamalli Sambar Recipe in Tamil: தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான சைடிஷ் என்றால் அது சாம்பர்தான். சாம்பாரையும், நம்மையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. சாதமாக இருந்தாலும் சரி, இட்லி, தோசையாக இருந்தாலும் சரி சாம்பார் இல்லாமல் நம்மால் சாப்பிட முடியாது. சாம்பார் தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான உணவாகும்.

சாம்பாரிலேயே நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளது. தமிழ்நாட்டிலேயே பல சாம்பார் வகைகள் உள்ளது, அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப்போவது கொத்தமல்லி சாம்பார். கொத்தமல்லியை வைத்து பொதுவாக சட்னிதான் அரைப்பார்கள், ஆனால் அதை வைத்து ஒரு மணமணக்கும் சாம்பார் வைக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த சாம்பார் சாதம், இட்லி, தோசை என அனைத்திற்கும் பக்காவான காம்போவாக இருக்கும். இந்த சாம்பார் செய்வது மிகவும் எளிதாக இருப்பதால் புதிதாக சமைக்க முயற்சிப்பவர்களும் எளிதாக செய்யலாம்.
உங்களுக்கு கொத்தமல்லி சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- முக்கால் கப் துவரம் பருப்பு
- 1 கப் கொத்தமல்லி இலைகள் (பொடியாக நறுக்கியது)
- 5 பச்சை மிளகாய்
- 1 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
- 2 வர மிளகாய்
- சிறிய எலுமிச்சை அளவு புளி
- தேவையான அளவு உப்பு
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 சிட்டிகை பெருங்காயம்
- 3 டீஸ்பூன் எண்ணெய்
- ½ டீஸ்பூன் கடுகு
செய்முறை:
- துவரம் பருப்பைக் கழுவி, போதுமான தண்ணீர் மற்றும் ½ தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- பிரஷர் வெளியேறியதும் பருப்பை நன்கு மசித்துக் கொள்ளவும்.
- சிறிய எலுமிச்சை அளவு புளியை சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, 2 கப் புளிக்கரைசலை கரைத்து வைத்துக்கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகளைப் பொடியாக நறுக்கவும்.
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் பச்சை மிளகாயைக் கீறி, வர மிளகாயைப் பாதியாக உடைத்துச் சேர்க்கவும்.
- ஒரு நிமிடம் வதக்கி, நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் புளிக் கரைசலைச் சேர்க்கவும்.
- அத்துடன் ½ டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்க்கவும்.
- இதை மிதமான தீயில் 8 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- புளியின் பச்சை வாசனை போனதும், வேகவைத்து மசித்து வைத்துள்ள துவரம் பருப்பைச் சேர்க்கவும்.
- பின்னர் நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.
- உங்கள் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து, சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான கொத்தமல்லி சாம்பார் ரெடி!



Click it and Unblock the Notifications