Latest Updates
-
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க..
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
Chicken Rasam Recipe In Tamil: நீங்க சிக்கன் வாங்குனா எப்போதும் கிரேவி, குழம்பு என்று தான் செய்வீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ரசம் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் சிக்கனைக் கொண்டு ரசம் செய்யுங்கள். இந்த சிக்கன் ரசம் மழை நேரத்தில் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். அதுவும் வெறும் 100 கிராம் சிக்கன் இருந்தாலே போதும் ஒரு குண்டா ரசத்தை வைக்கலாம்.

உங்களுக்கு இந்த சிக்கன் ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
* தக்காளி - 3
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 2-3
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* எலும்புள்ள சிக்கன் - 150 கிராம்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைத்த ரச விழுது
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மல்லி - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 6 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளியை நீரில் ஊற வைத்து,
சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த புளிச்சாற்றுடன் 3 தக்காளியை சேர்த்து, கைகளால் நன்கு
பிசைந்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம், மல்லி, பூண்டு, இஞ்சி,
வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கீறி
வைத்துள்ள 1 பச்சை மிளகாய், 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் எலும்புள்ள சிக்கனை கழுவி சேர்த்து வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள ரச விழுதை சேர்த்து நன்கு 2
நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி, உப்பு சுவை பார்த்து,
வேண்டுமானால் நீரை ஊற்றி கலந்து, மூடி வைத்து 15-20 நிமிடம் நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்த பின், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால்,
சுவையான சிக்கன் ரசம் தயார்.



Click it and Unblock the Notifications
