பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?

Pitru Paksha 2026: ஜோதிட சாஸ்திரத்தின் படி, பித்ரு பக்ஷம் என்பது முன்னோர்களை நினைவுகூர்வதற்கும், தர்ப்பணம் மற்றும் சிரார்த்த சடங்குகளைச் செய்வதற்கும் ஒரு முக்கியமான காலமாகும். இந்த ஆண்டு, பித்ரு பக்ஷம் செப்டம்பர் 27-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீடிக்கும். பித்ரு பக்ஷத்தின் இறுதி நாள் மகாளய அமாவாசையுடன் முடிவடைகிறது.

Pitru Paksha 2026 Bring Career Growth and Success To These Zodiac Signs

மதரீதியான முக்கியத்துவம் மட்டுமின்றி, பித்ரு பக்ஷ காலத்தில் நிலவும் கிரக நிலைகளும் ஜோதிடத்தில் முக்கியமாகக் கருதப்படுகின்றன. ஜோதிடக் கணிப்புகளின்படி, இக்காலத்தில் ஏற்படும் சில கிரகச் சேர்க்கைகள் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்குச் சாதகமான பலன்களை அளிக்கக்கூடும். இக்கிரகங்களின் தாக்கங்கள் தொழில், வேலைவாய்ப்பு மற்றும் வணிகம் ஆகியவற்றில் புதிய வாய்ப்புகளைக் கொண்டுவரும். பித்ரு பக்ஷ காலத்தில் பலன் பெறக்கூடிய ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த பித்ரு பக்ஷ காலம் வேலை மற்றும் தொழில் ரீதியாக சாதகமான பலன்களை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கலாம். அதேவேளையில், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவடையக்கூடும். வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கலாம். அவர்கள் வாழ்க்கையில் வெற்றிக்கான பல வாய்ப்புகள் தேடிவர வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்கள் இந்த காலகட்டத்தில் பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம்.

பெரும்பாலும் இந்த காலகட்டம் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்ததாக இருக்கும். திருமணமான தம்பதிகளிடையே நிலவி வந்த பழைய பிரச்சினைகள் இப்போது தீர்க்கப்படலாம். பல முடிக்கப்படாத விஷயங்களை இப்போது சரியாக முடிக்க முடியும். மாணவர்களுக்கும் இது சிறப்பான காலகட்டமாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மகிழ்ச்சியான பலன்களை கொடுக்கும் காலமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் அதிர்ஷ்டம் அனைத்து முயற்சிகளிலும் பிரகாசிக்கும், மேலும் பேச்சாற்றல் மூலம் அவர்கள் பல விஷயங்களை சாதிக்கலாம். இந்த காலகட்டத்தில் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து லாபம் ஈட்ட வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, இந்த காலகட்டத்தில் அவர்கள் வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் அடையலாம்.

வேலையில்லாதவர்கள் இந்த காலகட்டத்தில் பொருத்தமான வேலையைப் பெறலாம் மற்றும் பணத்தைச் சேமிப்பதில் வெற்றி பெறலாம். மேலும், வணிகர்கள் புதிய வியாபாத்தின் மூலம் பணம் சம்பாதிக்கலாம். தொழில் துறையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள், மேலும் அவர்களின் கடின உழைப்பிற்கான முழுபலனைப் பெறலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வணிக வாய்ப்புகளுக்கு இந்த காலகட்டம் சாதகமானதாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் அவர்களின் நற்பெயரும் சமூக அந்தஸ்தும் மேம்படக்கூடும். கடந்த கால மோதல்கள் இப்போது தீர்க்கப்படலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் வெற்றியைப் பெற முடியும். அவர்களின் திருமண மகிழ்ச்சியாக இருக்கும், அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை மற்றும் பொறுப்புணர்வு அதிகரிக்கும்.

சொத்து அல்லது நிலம் தொடர்பாக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் சாதகமான பலன்களை அனுபவிக்கலாம், மேலும் தொழில் வளர்ச்சிக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலவி வந்த ஆரோக்கியப் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இது வெற்றிகள் குவியும் காலமாக இருக்கும். இதனால் அவர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் முதலீடுகள் இப்போது விரும்பிய பலன்களைத் தரும். திருமணமாகாதவர்களுக்கு, இந்த காலகட்டத்தில் சுவாரஸ்யமான ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் பயணங்கள் இப்போது எதிர்பார்த்த லாபத்தைக் கொடுக்கும்.

அவர்களின் அலுவலக சூழல் மிகவும் சாதகமாக இருக்கும், மேலும் மேலாதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறலாம். கடந்த காலத்தில் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நிலவி வந்த பல்வேறு பிரச்சனைகளை அவர்கள் திறமையாக சமாளிக்க முடியும். இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, October 6, 2026, 21:45 [IST]
Desktop Bottom Promotion