டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா?

உலகம் முழுவதும் வாகனப் போக்குவரத்தைச் சீரமைப்பதிலும், சாலைகளில் வாகன நெரிசலைக் குறைப்பதிலும், வாகன ஓட்டிகள் சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதிலும் போக்குவரத்துப் காவலர்களின் பங்கு என்பது இன்றியமையாதது. போக்குவரத்து காவலர்கள் இல்லாமல் ஒரு நாளைக்கூட சாலையில் பாதுகாப்பாக கடக்க முடியாது.

Why Traffic Police Officers in India Wear White Uniforms

இந்தியாவைப் பொறுத்தவரை போக்குவரத்து காவலர்கள் வெவ்வேறு மாநிலங்களில் வேலை செய்தாலும் ஒரே மாதிரியாக வெள்ளை நிற சீருடை அணிவது ஏன் என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? போக்குவரத்து காவலர்களின் இந்த ஒரே நிற சீருடைக்குப் பின்னால் பல்வேறு சுவாரஸ்யமான காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வெயிலை சமாளிக்க

பரபரப்பான ஜங்க்ஷன்கள் மற்றும் குறுகி சாலைகளில் நீண்ட நேரம் திறந்தவெளியில் பணியாற்ற வேண்டியிருப்பதால், அவர்களின் சீருடைகள் நடைமுறைக்கு ஏற்ற வகையிலும், எளிதில் அடையாளம் காணக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் எளிதில் கண்ணுக்குத் தெரிதல் மற்றும் வெப்பத்திலிருந்து பாதுகாப்பு பெறுதல் ஆகியவை வெள்ளை நிறச் சீருடை பயன்பாட்டிற்கான முக்கியக் காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன

எளிதில் தெரியக்கூடிய நிறம்

போக்குவரத்து காவலர்களின் வெள்ளை நிற சீருடைக்குப் பொதுவாகக் குறிப்பிடப்படும் ஒரு காரணம் அது எளிதில் தெரியக்கூடிய நிறமாக இருப்பதுதான். போக்குவரத்துப் பிரிவுப் பணியாளர்கள் பெரும்பாலும் பரபரப்பான சாலைகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள் மற்றும் வாகன நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பணியாற்றுகின்றனர். வெள்ளை நிறச் சீருடை, சுற்றியுள்ள போக்குவரத்து மற்றும் கட்டமைப்புக்கு மத்தியில் தனித்துத் தெரிவதால், வாகன ஓட்டிகள் தொலைவிலிருந்தே காவலர்களை எளிதாக அடையாளம் காண முடிகிறது. போக்குவரத்துப் பணியாளர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும்போதோ அல்லது வாகனங்களை நிறுத்தவோ அல்லது நகரவோ சைகை காட்டும்போதோ, இந்த நிறம் உடனடியாக அதை கவனிக்க வழிவகுக்கிறது.

வெப்பநிலை

இந்தியாவில் நிலவும் வெப்பமான வானிலை நிலையும் இந்த வெள்ளை நிற சீருடைக்கான முக்கியக் காரணமாக உள்ளது. போக்குவரத்துப் போலீசார் பல மணிநேரம் திறந்தவெளியில், சில சமயங்களில் நேரடியாக வெயிலில் நிற்க வேண்டியிருக்கும். அடர் நிறங்கள் சூரியக் கதிர்வீச்சை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டவை. ஆனால், வெள்ளை நிறம் சூரிய ஒளியை அதிக அளவில் பிரதிபலிக்கக்கூடியது. இதன் விளைவாக, நேரடி சூரிய ஒளியில் வெளிர் நிறத்திலான ஆடைகளை அணியும்போது ஒப்பீட்டளவில் குளிர்ச்சியாக உணர முடியும்.

வெள்ளை நிற சீருடையில் உள்ள சிக்கல்கள்

இந்த வெள்ளை நிற சீருடையில் சில நடைமுறை சிக்கல்களும் உள்ளன. இந்த சீருடையை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் பராமரிப்பது மிகவும் சவாலான காரியமாகும். சாலையில் உள்ள மழை, மணல் மற்றும் சேறு ஆகியவை வெள்ளை நிற உடை அணிந்திருக்கும்போது பெரும் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், இவற்றைச் சுத்தம் செய்வதற்கு அதிக நேரமும் பணமும் செலவாகிறது. இத்தகைய நடைமுறைச் சிக்கல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் உள்ள போக்குவரத்துப் போலீஸார் தொடர்ந்து வெள்ளை நிறச் சீருடைகளையே அணிந்து வருகின்றனர்.

Story first published: Tuesday, October 6, 2026, 15:44 [IST]
Desktop Bottom Promotion