Latest Updates
-
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்! -
சிங்கப்பூர் வெஜ் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ரைஸ் செஞ்சா இனிமே ஹோட்டல் பக்கமே போகமாட்டிங்க
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
Verkadalai Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் டிபனா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் இட்லி, தோசைக்கு சட்னியைத் தான் விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் 1/2 கப் வேர்க்கடலை இருந்தால், அதைக் கொண்டு வேர்க்கடலை சட்னியை செய்யுங்கள்.

இந்த வேர்க்கடலையை சட்னியை பல விதங்களில் செய்வார்கள். ஆனால் இந்த வேர்க்கடலை சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். ஒருமுறை இந்த பக்குவத்தில் செய்தால், பின் எப்போதும் இப்படி தான் வேர்க்கடலை சட்னியை செய்வீர்கள்.
உங்களுக்கு இந்த வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காய்ந்த வேர்க்கடலை - 1/2 கப்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* வரமிளகாய் - 5
* கறிவேப்பிலை - 1 கொத்து
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/4 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - ஃ/2
* உளுத்தம் பருப்பு - 1/2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் காய்ந்த
வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுத்து ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு
குளிர வைக்க வேண்டும்.
* பின் வேர்க்கடலையில் உள்ள தோலை நீக்கிவிட வேண்டும்.
* அதன் பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், புளி, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து மிதமான
தீயில் வைத்து நன்கு வறுத்து, அதையும் ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த மிளகாய், புளி மற்றும் கறிவேப்பிலையை
மட்டும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் தோல் நீக்கிய வேர்க்கடலை, துருவிய தேங்காய்,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து, 1/4 கப் நீரை
ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்க்க வேண்டும்.
* இறுதியாக சட்னியை தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
பெருங்காயத் தூள் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன்
சேர்த்து கலந்தால், சுவையான வேர்க்கடலை சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
