அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா?

Rahu In Avittam Nakshatra 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் மட்டுமின்றி, நட்சத்திர மாற்றங்களும் மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாகும். இவ்விரு கிரகங்களும் ஒரு ராசியில் மட்டுமின்றி, நட்சத்திரத்திலும் நீண்ட காலமாக பயணிக்கும். இதனால் இந்த ராகு-கேதுவின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே ஆழமாக தெரியும்.

Rahu In Avittam Nakshatra 2026 These Zodiac Signs Will Get More Benefits

அந்த வகையில் சமீபத்தில் தான் ராகு தனது நட்சத்திர நிலையை மாற்றினார். அதுவும் அக்டோபர் 03 ஆம் தேதி ராகு அவிட்டம் நட்சத்திரத்தின் மூன்றாம் கட்டத்தில் நுழைந்தார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் என்பதால், இந்த நட்சத்திர மாற்றம் செல்வாக்குமிக்கதாக கருதப்படுகிறது. ராகுவின் இந்த நட்சத்திர நிலை மாற்றத்தினால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

அதுவும் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வாழ்வில் பல நேர்மறையான மாற்றங்களைக் காணக்கூடும். முக்கியமாக இந்த ராசிக்காரர்களை யாராலும் வீழ்த்த முடியாது. அந்த அளவில் வலிமையானவர்களாக இருப்பார்கள். இப்போது அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கும் ராகுவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்

அவிட்டம் நட்சத்திரத்தின் மூன்றாம் கட்டத்தில் இருக்கும் ராகுவால் கடக ராசிக்காரர்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் நிலை மேம்படும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பயணங்களால் எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறக்கூடும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இருப்பினும் இக்காலத்தில் அவசரப்பட்டு நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரிகள் பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.

சிம்மம்

அவிட்டம் நட்சத்திரத்தின் மூன்றாம் கட்டத்தில் இருக்கும் ராகுவால் சிம்ம ராசிக்காரர்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுவார்கள். புதிய வீடு வாங்கும் கனவு நனவாகும் வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். குடும்ப வசதிகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியுள்ள பணம் கைக்கு வந்து சேரும். நீதிமன்ற வழக்குகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கும்பம்

அவிட்டம் நட்சத்திரத்தின் மூன்றாம் கட்டத்தில் இருக்கும் ராகுவால் கும்ப ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நட்புகளால் நல்ல ஆதாயம் கிடைக்கும். நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். ஏற்கனவே செய்துள்ள முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion