அக்டோபர் 09-ல் சொந்த நட்சத்திரம் செல்லும் சனி பகவான்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?

Saturn Nakshatra Transit 2026: ஜோதிடத்தில் சனி பகவான் ஒழுக்கம், கர்மம், நீதி, நேர்மை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். அதோடு இவர் அடிக்கடி நட்சத்திரத்தையும் மாற்றுவார். இப்படி ஒரு ராசியில் நீண்ட காலமாக சனி பகவான் இருப்பதால், சனியின் நிலையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமாக காணப்படும்.

Saturn Transit In Uthirattathi Nakshatra On 09 October 2026 Effects On 12 Zodiac Signs

அந்த வகையில் தற்போது சனி பகவான் மீன ராசியிலும், ரேவதி நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 09 ஆம் தேதி சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தில் இருந்து வெளியேறி, வக்ர நிலையில் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் ஆவார். இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் 2027 பிப்ரவரி 08 ஆம் தேதி வரை, சுமார் 83 நாட்கள் இருக்கப் போகிறார்.

சனி பகவானின் இந்த நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளிலுமே ஏதாவது ஒருவகையில் காணப்படும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருட்ககு மோசமாகவும் இருக்கலாம். இப்போது அக்டோபர் 09 இல் நடக்கும் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சாதாரணமாக இருக்கும். வேலையில் கவனம் செலுத்தி, நன்கு சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். வியாபாரம் வழக்கம் போல இருக்கும். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் மற்றும் அந்த வேலையும் வெற்றிகரமாக முடிவடையும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனால் பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. இருப்பினும் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் அதிகரித்த பொறுப்புகள் உங்களைக் கடினமாக உழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளக்கூடும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு நல்ல வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பணியிடத்தில் மேற்கொள்ளும் முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் சனி பகவானின் நட்சத்திர மாற்றத்தால் மதிப்பையும், மரியாதையையும் பெறுவார்கள். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திப்பார்கள். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு பாராட்டப்படும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இக்காலத்தில் நீங்கள் பெரிய திட்டங்களை தீட்டுவீர்கள் மற்றும் அந்த திட்டங்களும் நல்ல வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிள்ளைகளிடம் இருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். அவசரப்பட்டு எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். தொழிலில் எதிர்பாராத அளவில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைப்பதோடு, சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் முழு தகவல்களை சேகரித்த பின் எடுக்க வேண்டும். வேலை தொடர்பான விஷயங்களில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்பால் வாழ்க்கை ஓரளவு நன்றாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி சிறப்பான பலன்களைத் தரும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் உயர் கல்வி பயில வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நல்ல நிதி ஆதாயங்களுடன் முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்களும் கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். இருப்பினும் சமூகத்தில் அந்தஸ்து உணரும். உங்களின் பிம்பம் மேம்படும். ஆனால் நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். நன்கு யோசிக்காமல் எந்த ஒரு பெரிய முதலீடுகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியானது அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன்கள் இக்காலத்தில் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதன் மூலம் பண பிரச்சனைகள் தீரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் நிதி விஷயங்களில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோருடன் போதுமான நேரத்தை செலவிட முடியும். முக்கியமாக கூட்டு தொழில் செய்பவர்கள் கணிசமான லாபத்தை பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, October 7, 2026, 11:04 [IST]
Desktop Bottom Promotion