இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்!

பொதுவாக இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளானது பாரம்பரிய இனிப்புகள் இல்லாமல் முழுமையடைவதில்லை. ஒவ்வொரு பண்டிகையும் லட்டு, அதிரசம், குலாப்ஜாமூன், பொங்கல், கொழுக்கட்டை, பாயாசம் என உணவையும், குடும்பத்தையும் மையமாக கொண்டே அமைகின்றன. ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பண்டிகை காலங்களானது சவால்கள் நிறைந்ததாக இருக்கும். இனிப்பு பலகாரங்களை கொஞ்சமாவது சாப்பிடலாமா அல்லது முற்றிலும் தவிர்க்க வேண்டுமா? என்ற கேள்வியுடன் ஒரு முடிவெடுக்க முடியாமல் இருப்பார்கள். ஆனால் இதற்கான முடிவு இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அனைத்து இனிப்புக்களையும் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. மாறாக உட்கொள்ளும் உணவின் அளவு, உண்ணும் நேரம் மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் போன்றவற்றை புரிந்து நடந்து கொண்டால், பண்டிகை காலங்களில் இரத்த சர்க்கரை அளவு சட்டென்று அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

'Gyaan by Ganesh - Making India Win Over Diabetes' என்பது சன் பார்மா நிறுவனம், அமெரிக்க நீரிழிவு சங்கத்துடன் இணைந்து நடத்தும் ஒரு விழிப்புணர்வு முன்னெடுப்பாகும். இது நிபுணர்களின் ஆதரவு பெற்ற தகவல்கள் மூலம், இந்தியர்கள் நீரிழிவு நோயை நன்கு புரிந்துகொள்ளவும், தடுக்கவும், நிர்வகிக்கவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Festive Sweets and Diabetes 7 Smart Ways to Enjoy Mithai Without Spiking Your Blood Sugar

1. ஸ்வீட் சாப்பிட கார்போஹைட்ரேட் அளவைச் சேமித்து வைக்காதீர்கள்

பலர் பண்டிகை காலத்தில் சாதம் அல்லது சப்பாத்தி சாப்பிடுவதைத் தவிர்த்தால், வரம்பில்லாமல் ஸ்வீட் சாப்பிடலாம் என்று நினைக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக நமது உடல் இனிப்புகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. எனவே உணவுக்கு மாற்றாக இனிப்புக்களை எடுப்பதற்கு பதிலாக, சமச்சீரான உணவை உட்கொண்டு, சிறிது ஸ்வீட்டையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

"சர்க்கரை நோயாளிகள் பண்டிகை கால இனிப்புக்களை முழுமையாக தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர்கள் உணவில் உள்ள மொத்த கார்போஹைட்ரேட் அளவைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உணவுக்குப் பதிலாக இனிப்புகளைச் சாப்பிடுவதையோ அல்லது பின்னர் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதையோ விட, சமச்சீரான உணவைத் தொடர்ந்து சிறிதளவு இனிப்பு சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது. சீரான உணவுப் பழக்கம், அளவாக உண்ணுதல் மற்றும் கவனத்துடன் கூடிய உணவுப் பழக்கம் ஆகியவை சர்க்கரை நோயைச் சிறந்த முறையில் நிர்வகிப்பதற்கான அடிப்படைக் கூறுகளாகும்."

Dr. P Manoj Kumar, Consultant Physician & Diabetologist, Trichy

2. வெறும் வயிற்றில் இனிப்புக்களை சாப்பிடாதீர்கள்

உணவுக்கு முன் அல்லது மிகவும் பசியாக இருக்கும் போது இனிப்புக்களை சாப்பிட்டால், அது இரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும். காய்கறிகள், புரோட்டீன் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கிய உணவுக்குப் பிறகு இனிப்பு சாப்பிடுவது செரிமானத்தை மெதுவாக்குகிறது மற்றும் உணவுக்குப் பிந்தைய குளுக்கோஸ் அதிகரிப்பைக் குறைக்கக்கூடும்.

பண்டிகை காலங்களில் இனிப்புக்கள் அதிகம் இருப்பதால், அவற்றை சாப்பிட ஆசை அதிகரிக்கும். அப்போது அனைத்து இனிப்புக்களையும் சுவைப்பதற்கு பதிலாக, ஏதாவது ஒரு ஸ்வீட்டை தேர்ந்தெடுத்து, அதை மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிடுங்கள். இது அதிகப்படியான சர்க்கரை மற்றும் கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவுகிறது.

3. சர்க்கரையை மட்டுமின்றி உணவின் அளவையும் கவனியுங்கள்

சுகர்-ப்ரீ இனிப்புக்களில் கூட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புக்கள் அதிகளவில் இருக்கலாம். எனவே பண்டிகை காலத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சுகர்-ப்ரீ இனிப்புகளாக இருந்தாலும், அவற்றையும் அளவாக சாப்பிடுங்கள். ஒரு சமச்சீரான உணவு வயிறு நிரம்பிய உணர்வை வழங்குவதோடு, இனிப்புக்களை அதிகமாக உண்ணும் ஆசையை குறைக்கும்.

4. உணவுக்கு பின் சிறு நடைப்பயிற்சி

உணவுக்கு பின் 10-15 நிமிடம் நடைப்பயிற்சியை செய்வது தசைகள் குளுக்கோஸை திறம்பட பயன்படுத்த உதவுகிறது மற்றும் உணவுப் பின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கவும் உதவுகிறது. எனவே பண்டிகைக் காலங்களில் சர்க்கரை நோயாளிகள் பின்பற்றக்கூடிய எளிமையான பழக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.

5. நீரேற்றத்துடன் இருங்கள்

பண்டிகை காலத்தில் சர்க்கரை நிறைந்த குளிர்பானங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஜூஸ்கள் மற்றும் ஸ்வீட் லஸ்ஸிகள் போன்றவையும் அதிகம் அருந்தப்படக்கூடிய பானங்களாகும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் இருக்க மோர், சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் அல்லது சர்க்கரை சேர்க்கப்படாத பானங்களைத் தேர்ந்தெடுத்து அருந்தவும்.

6. நீரிழிவு மருந்துகளை தவிர்க்காதீர்கள்

பண்டிகை காலங்களில் பெரும்பாலும் அன்றாட வழக்கங்கள் சீர்குலையக்கூடும். ஆனால் சர்க்கரை நோய் இருந்தால் தவறாமல் நீரிழிவு மருந்துகளையும், இன்சுலினையும் தவறாமல் எடுத்து வாருங்கள். ஒருவேளை வழக்கத்தை விட வித்தியாசமாகச் சாப்பிட்டால், உங்கள் இரத்தச் சர்க்கரை அளவைக் கண்காணிப்பது, பண்டிகை கால உணவுகள் உடலை எப்படி பாதிக்கிறது என்பதை புரிந்து கொள்ள உதவுவதோடு, ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண உதவும்.

7. உணவைத் தாண்டி பண்டிகையை கொண்டாடுங்கள்

பண்டிகைகள் என்பது பலகாரங்களை ருசிப்பதற்காக மட்டுமல்ல, அது அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கானவையும் கூட. எனவே பண்டிகை நாட்களில் பலகாரங்களை மட்டும் சாப்பிட நினைக்காமல், உரையாடல், இசை மற்றும் கொண்டாட்டங்களில் கவனம் செலுத்துங்கள். இதன் மூலம் பண்டிகை நாட்களில் இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் தடுக்கலாம்.

சர்க்கரை நோயுடன் வாழ்ந்தால் பண்டிகைக் கால கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்பதில்லை. இந்த காலத்தில் உண்ணும் உணவை கவனமாக தேர்ந்தெடுத்து, அளவாக உட்கொண்டு, உடற்பயிற்சி மற்றும் முறையான நீரிழிவு மருந்துகளை எடுத்து வந்தால், இரத்த சர்க்கரை பாதிக்காமலேயே, பிடித்த பாரம்பரிய இனிப்புகளை ரசித்து சாப்பிடலாம்.

SPI-IN-CVD-ZT---08-20260336

பொறுப்புத் துறப்பு: இந்தப் பொருள் நோயாளிகளுக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. இது மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனைக்கு மாற்றாகாது. Sun Pharmaceuticals Laboratories Limited (SPLL) துல்லியமான மற்றும் காலத்திற்கேற்ற தகவல்களை வழங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது. இருப்பினும், இது குறித்து எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை. நீங்கள் உங்கள் மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரை அணுகி, அவர்களின் ஆலோசனையை மட்டுமே பின்பற்ற வேண்டும். Sun Pharmaceuticals Laboratories Limited (SPLL)-க்கு தெரியப்படுத்தாமல், இதன் எந்தப் பகுதியையும் இயந்திரம் அல்லது மின்னணுவியல் ரீதியாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ மறுஉருவாக்கம் செய்யவோ, பரப்பவோ அல்லது சேமித்து வைக்கவோ கூடாது.

Desktop Bottom Promotion