லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..

Posted By:

Lunch Box Special Kovakkai Sadam Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் ஸ்கூலுக்கு லன்ச் பாக்ஸ்-க்கு என்ன செய்வதென்று முடிவெடுப்பது பெரிய வேலையாக உள்ளதா? என்ன செய்து கொடுத்தாலும் உங்கள் பிள்ளைகள் சரியாக சாப்பிடாமல் வருகிறார்களா? உங்கள் பிள்ளைகளுக்கு புதுமையான மற்றும் பிடித்த மாதிரி, அதே சமயம் சத்தான ஒரு லன்ச் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் கோவக்காயைக் கொண்டு ரைஸ் செய்து கொடுங்கள். இப்படி கோவக்காய் சாதம் செய்யும் போது, கோவக்காய் பிடிக்காத பிள்ளைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Lunch Box Recipes How To Make Kovakkai Sadam Recipe

உங்களுக்கு இந்த கோவக்காய் சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவக்காய் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மசாலா அரைப்பதற்கு...

* பெரிய வெங்காயம் - 2
* உப்பு - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* புளி - 3 துண்டு
* தண்ணீர் - 2 ஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* கோவக்காய் - 1/2 கிலோ (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* அரைத்த மசாலா
* வதக்கிய கோவைக்காய்
* உப்பு - சுவைக்கேற்ப
* பாசுமதி அரிசி சாதம் - 1 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் நறுக்கிய வெங்காயம், உப்பு, மல்லி, சீரகம், பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், புளி ஆகியவற்றை சேர்த்து லேசாக அரைக்க வேண்டும்.
* பின் அதில் 2 ஸ்பூன் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள கோவக்காயை சேர்த்து நன்கு வதக்கி வேக வைத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், வரமிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வதக்கி வைத்துள்ள கோவக்காயை சேர்த்து, சிறிது உப்பு தூவி, மசாலா காயுடன் ஒன்று சேரும் வரை வதக்க வேண்டும்.
* ஒருவேளை அடிப்பிடிப்பது போன்று இருந்தால், 2 ஸ்பூன் நீரை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் பாசுமதி அரிசி சாதத்தை சேர்த்து மசாலா சாதத்துடன் ஒன்று சேரும் வரை 3-4 நிமிடம் கிளறி, நெய் சேர்த்து மீண்டும் கிளறி இறக்கினால், கோவக்காய் சாதம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, October 7, 2026, 20:55 [IST]
Desktop Bottom Promotion