Latest Updates
-
சூரியன்-செவ்வாய் உருவாக்கும் அரிய யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்கப்போகுதாம் -
10 சின்ன வெங்காயம் இருந்தா இப்படி கேரளா ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
40 வயதிலும் 20 வயது போல காட்சியளிக்க தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் - இந்த உணவுகளை அதிகமா சாப்பிடாதீங்க -
3000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் தோன்றிய முதல் ஸ்வீட் எது தெரியுமா? உங்களுக்கு இந்த ஸ்வீட் பிடிக்குமா? -
மதுரை ஸ்பெஷல் தக்காளி பொங்கல் ரெசிபி - இந்த மாதிரி தக்காளி சாதம் செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் இந்த 3 ராசிகளை தோல்விகளும், நஷ்டங்களும் துரத்தப்போகுதாம் -
வழக்கமான சாம்பார் வைக்காம இந்த மங்களூர் ஸ்டைல் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
விமானத்தில் பயணிக்கும் போது போனை ஏன் அவசியம் 'Airplane Mode'-ல் வைக்க சொல்றாங்க தெரியுமா? -
வெங்காயம் சேர்க்காத பூண்டு தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 18, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கப்போகுதாம்
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Mahalaya Amavasya 2026: இந்து மாதத்தில் மகாளய அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இந்த வருட மகாளய அமாவாசை கூடுதல் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இந்த வருட மகாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி சனிக்கிழமையன்று வருகிறது. மகாளய அமாவாசை மறைந்த முன்னோர்களை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளாகும்.

புரட்டாசி மாதத்தின் தேய்பிறைக் காலத்தில் கடைப்பிடிக்கப்படும் இந்நாளில், முன்னோர்களின் ஆன்மாக்கள் தங்கள் குடும்பத்தினரை வந்து ஆசீர்வதிப்பதாக நம்பப்படுகிறது. தங்கள் முன்னோர்கள் அமைதியையும் துன்பங்களிலிருந்து விடுதலையையும் அடைவதற்கு உதவ, பக்தர்கள் 'பிண்ட தானம்' செய்வதுடன் நீர், உணவு மற்றும் பிரார்த்தனைகளைச் சமர்ப்பிக்கின்றனர். நம் முன்னோர்களிடமிருந்து நாம் பெற்ற ஆசிகளுக்கு நன்றி செலுத்துவதற்கான தருணமாகவும் இந்த நாள் அமைகிறது. இந்நாளில், முன்னோர்களின் அருளைப் பெறவும் துரதிர்ஷ்டத்திலிருந்து விடுபடவும் பக்தர்கள் சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முன்னோர்களுக்கு நீர் மற்றும் எள் சமர்ப்பித்தல்
மகாளய அமாவாசை அன்று, கருப்பு எள் கலந்த நீரை முன்னோர்களுக்கு அர்ப்பணிப்பது மிகுந்த நற்பலன்களைத் தருவதாகக் கருதப்படுகிறது. இந்த எளிய சடங்கு, கடந்த கால கர்ம வினைகளின் பாவங்களிலிருந்து விடுபடுவதற்கும், மறைந்த ஆன்மாக்களுக்கு அமைதியை அளிப்பதற்கும் உதவுவதாக நம்பப்படுகிறது. உங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூர்ந்தபடியும், நன்றியுணர்வுடனும் இச்சடங்கை மனதாரச் செய்ய வேண்டும்.
பக்தியுடன் பிண்ட தானம் செய்ய வேண்டும்
பிண்ட தானம் என்பது எள், நெய் மற்றும் தேன் கலந்த சாத உருண்டைகளை முன்னோர்களுக்குப் படைக்கும் ஒரு புனிதமான சடங்காகும். மகாளய அமாவாசை அன்று இதனைச் செய்வது, முன்னோர்களைத் துன்பங்களிலிருந்து விடுவிக்கவும், அவர்களின் ஆன்மீக முன்னேற்றத்தை உறுதிப்படுத்தவும் உதவுகிறது. சடங்கு செய்யும் துல்லியத்தன்மையை விட, அன்புடனும். பக்தியுடனும் இதனை மேற்கொள்ள வேண்டும்.
ஏழைகளுக்கு உணவு மற்றும் தேவைப்படும் பொருட்களை தானம் செய்யுங்கள்
மகாளய அமாவாசையன்று தர்ம காரியங்கள் செய்வது மிகவும் முக்கியமானதாகும். ஏழைகளுக்கு உணவு, ஆடைகள் அல்லது பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது உங்கள் முன்னோர்களை மகிழ்விப்பதோடு, உங்கள் குடும்பத்திற்கு ஆசிகளையும் பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது. இந்த நற்செயல்கள் கருணையை வெளிப்படுத்துகின்றன. மேலும், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதன் மூலம் உங்கள் முன்னோர்களின் நினைவை நீங்கள் போற்றுகிறீர்கள்.
முன்னோர்களின் புகைப்படங்களுக்கு முன் விளக்கேற்றுதல்
முன்னோர்களின் புகைப்படங்களுக்கு முன்னால் நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்றுவது, அவர்களுக்கு மரியாதை மற்றும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த வழியாகும். அந்த ஒளிச்சுடர் நம்பிக்கை, நினைவுகூரல் மற்றும் ஆன்மீகத் தொடர்பின் குறியீடாகத் திகழ்கிறது. மகாளய அமாவாசை அன்று, அமைதியாக அமர்ந்து தியானம் செய்து, அவர்களின் முக்தி மற்றும் ஆசிர்வாதங்களுக்காக மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.
மந்திரங்களை உச்சரித்தல்
"ஓம் நமோ பகவதே வாசுதேவாய" போன்ற புனித மந்திரங்களை உச்சரிப்பதோ அல்லது கருட புராணம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற புனித நூல்கலை வாசிப்பதோ ஆன்மீகப் பாதுகாப்பையும் ஆசிகளையும் பெற்றுத்தரும். மஹாளய அமாவாசை அன்று பிரார்த்தனை மற்றும் சிந்தனையில் நேரத்தைச் செலவிடுவது, முன்னோர்களுடனான உங்கள் பிணைப்பை வலுப்படுத்துகிறது.



Click it and Unblock the Notifications

