Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரப்போகுதாம் -
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். சிலர் தங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அதிகமாக பொய் பேசுபவர்களாக இருப்பார்கள். சிலர் வெறும் பொய் பேசுபவர்களாக மட்டுமல்லாமல், ஆபத்தானவர்களாகவும் இருக்கிறார்கள். மக்களை ஏமாற்றவும், பல்வேறு வகையான மோசடிகளில் ஈடுபடவும் அவர்கள் எப்போதும் ஒரு திட்டத்தை வைத்திருப்பார்கள்.

தங்கள் செயல்களுக்காக அவர்கள் ஒருபோதும் வருந்த மாட்டார்கள். அதோடு, தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கும், நம்பிக்கைக்குரியவர்களுக்கும் கூட துரோகம் செய்ய அவர்கள் தயங்க மாட்டார்கள். குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்களிடம் இந்த தீய குணங்கள் அதிகமாக இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
கிரகங்களின் தளபதியான செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள் பொதுவாக அன்பானவர்கள், தாராள குணம் கொண்டவர்கள் மற்றும் பாசமிக்கவர்களாக இருப்பார்கள், ஆனால் இந்த முகமூடிக்குப் பின்னால் தங்கள் சுயநலத்திற்காக மற்றவர்களை இரக்கமின்றி ஏமாற்றத் துணியும் ஒரு முகம் இருப்பதை பெரும்பாலான மக்கள் அறிவதில்லை. துல்லியமாக திட்டமிடுவதிலோ அல்லது மக்களை ஏமாற்றுவதிலோ அவர்கள் பெரிய திறமைசாலிகள் இல்லையென்றாலும், மற்றவர்களை வஞ்சிக்க அவர்கள் பிறரின் உதவியை அதை செய்வார்கள். இறுதியில், தங்களுக்கு உதவிய அந்த நபரையே கூட அவர்கள் ஏமாற்றவும் அவர்கள் தயங்க மாட்டார்கள்.
கடகம்
சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் மற்றும் மென்மையான இதயமுடையவர்கள்; ஆனால், இதை வைத்து அவர்களை மிகவும் நல்லவர்கள் என்று எடைபோட்டுவிடக்கூடாது. மிகவும் அன்பான மற்றும் அப்பாவியாக நடித்து, அவர்கள் அனைவரையும் எளிதில் ஏமாற்றிவிடக்கூடும். தங்களை மனவருத்தத்திற்குள்ளாக்கும் நபர்கள் மீது அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் அதிருப்தியுடனும் இருப்பார்கள். எனவே அவர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்தவர்கள் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளும் வகையில், அவர்கள் பெயரில் மற்றவர்களை ஏமாற்ற அவர்கள் ஒரு நொடி கூட யோசிக்க மாட்டார்கள்.
சிம்மம்
கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் கனிவானவர்கள்கே, சிறந்த தலைவராக விளங்குபவர்கள் மற்றும் தாராள குணம் கொண்டவர்கள் என்று கருதப்படுவதால், அவர்கள் மீது யாரும் மோசடி செய்வதாகச் சந்தேகம் கொள்ள மாட்டார்கள். அந்தச் சமயத்தில்தான் அவர்கள் தங்கள் காயை நகர்த்தி, மற்றவர்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தாங்கள் விரும்பியதை அடைவதற்காகத் திட்டங்களை வகுத்து, அதன்படியே மற்றவர்களை செயல்பட வைப்பார்கள். தலைவராக இருந்து மற்றவர்களை ஏமாற்றுவதில் கில்லாடியாக இருப்பதால் அவர்கள் அரசியலில் பெரிய ஆளாக வர வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இத்தகைய விஷயங்களில் மிகுந்த திறமை வாய்ந்தவர்கள். ஒருவரை ஏமாற்றி மோசடி செய்வது என்பது அவர்களுக்கு எப்போதும் பெரிய விஷயமல்ல. அவர்கள் மிகவும் கவனமாகவும், எவ்விதப் பிழையும் ஏற்படாத வகையிலும் நுணுக்கமான திட்டங்களை வகுக்கக்கூடியவர்கள். தங்களின் பழிவாங்கும் வெறியைத் தீர்த்துக்கொள்ள மோசடி மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் அளவுக்கு அவர்களுக்குள் பகையுணர்வு இருக்கும். மற்ற அனைத்து ராசிக்காரர்களை விடவும் இவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
