ஸோம்பி (மிருதன்) பற்றி பலரும் அறியாத தகவல்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

ஸோம்பி (மிருதன்) இது நிஜமா, நிழலா? கற்பனையா? என்பதே மிகப்பெரிய கேள்விக் குறி தான். ஆனால், உலகெங்கிலும் பல இடங்களில் ஸோம்பி உண்மை எனவும், முற்காலத்தில் கண்டதாகவும் சில கூற்றுகளும், கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

இறந்த அல்லது உயிருள்ள மனிதர்களுக்கு ஏற்படும் ஒருவகையான வைரஸ் தாக்கத்தால் மிருகத்தனமாக மாறும் மனிதர்களை தான் ஸோம்பி என கூறுகிறார்கள். உருவத்தில் மனிதனாகவும், மனதளவில் மிருகமாகவும் இவர்கள் திரிவார்கள்.

ஸோம்பி பற்றி நிறைய ஆங்கில படங்கள் வெளியாகியுள்ளன. ஏன், இன்று தமிழில் முதல் ஸோம்பி படமாக மிருதன் வெளியாகியுள்ளது. இனி, ஸோம்பி பற்றி பலரும் அறியாத தகவல்களை காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸோம்பி

ஸோம்பி

ஸோம்பி என்ற வார்த்தை ஆப்ரிக்கா சொல்லான "nzambi"-ல் இருந்து எடுக்கப்பட்டது. இந்த சொல்லுக்கான பொருள் கடவுள் என்பதாகும்.

தமிழில்

தமிழில்

தமிழில் ஸோம்பியை பிணன் மற்றும் மிருதன் என்று கூறுகிறார்கள். மிருதன் என்பது மிருகம்+மனிதன் கலவை சொல் ஆகும்.

ஸோம்பி நாள்

ஸோம்பி நாள்

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 8-ம் நாள் உலக ஸோம்பி நாளாக கொண்டாடப்படுகிறது.

ஸோம்பி தியரி

ஸோம்பி தியரி

ஸோம்பிகளின் உருவாக்கம் குறித்து இரண்டு தியரிகள் இருக்கின்றன.

1. சபிக்கப்பட்டு இறந்த மனிதர்கள் ஸோம்பிக்களாக மீண்டு வருவது.

2. வைரஸ் அல்லது கதிர்வீச்சு தாக்கத்தால் ஸோம்பியாக மாறுவது.

மம்மீஸ்

மம்மீஸ்

மம்மிக்கள் மற்றும் ஸோம்பிக்கள் ஒன்று என கூறப்படாது. மம்மிக்கள் உடல் கெட்டுப் போகாமல் இருக்க பதப்படுத்தப்பட்ட வைப்பவை. ஸோம்பிக்கள் அழுகிய உடலுடன் நிலைபெற்று திரிபவை ஆகும்.

ஸோம்பியை கொள்வது எப்படி

ஸோம்பியை கொள்வது எப்படி

மூளையை சிதைத்து அல்லது தலையை துண்டித்து தான் ஸோம்பிக்களை கொல்ல முடியும்.

ஜார்ஜ் ஏ ரோமெரோ

ஜார்ஜ் ஏ ரோமெரோ

ஜார்ஜ் ஏ ரோமெரோ, இவர் தான் மாடர்ன் ஸோம்பிக்களின் தந்தை. இவர் ஸோம்பி பற்றி நிறைய திரைப்படங்கள் எடுத்துள்ளார்.

வூடூ இனத்தினர்

வூடூ இனத்தினர்

ஸோம்பி எனும் கருத்து வடிவம் மேற்கு ஆப்ரிக்காவில் இருந்த வூடூ இனத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் மத்தியில் இருந்து தான் துவங்கியது.

ஒட்டுண்ணி பூஞ்சை

ஒட்டுண்ணி பூஞ்சை

Ophiocordyceps எனப்படும் ஒட்டுண்ணி பூஞ்சை எறும்புகளை ஸோம்பியாக மாற்றுகிறது என கூறப்படுகிறது.

யாஸ் (Yaws)

யாஸ் (Yaws)

யாஸ் (Yaws) எனப்படும் ஓர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஸோம்பியை போல தான் தோற்றமளிக்கிறார்கள். முகம், கை, கால்கள், என உடல் முழுக்க இவர்கள் ஸோம்பியை போலவே பாதிக்கப்படுகிறார்கள். நடப்பதும் கூட இவர்கள் ஸோம்பியை போல முதுவாக தான் நடக்கிறார்கள்.

சூப்பர் பவர் ?

சூப்பர் பவர் ?

ஸோம்பிகளுக்கு சூப்பர் பவர் ஏதும் இல்லை. மனிதர்களாக இருந்ததைவிட, சில திறன்கள் தான் கூடியிருக்குமே தவிர, அவர்களும் மனிதர்களை போல தான்.

ஆர்.எல்.எப்

ஆர்.எல்.எப்

ஆர்.எல்.எப் (RLF) என்பது Reanimated Life Form என்பதன் சுருக்கமாகும். ஸோம்பியை ஆர்.எல்.எப் என்றும் கூறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித சதை

மனித சதை

ஸோம்பிக்களுக்கு பிடித்த உணவு மனிதர்களின் சதை. இதற்கான சில தியரிகளும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஸோம்பி வைரஸ் தாக்கத்தால் டி.என்.எ-வில் ஏற்படும் மாற்றங்கள் தான் இதற்கான காரணமாம்.

பாதுகாப்பான நாடு

பாதுகாப்பான நாடு

ஒருவேளை ஸோம்பிக்கள் தோன்றி பரவ ஆரம்பித்தால் சூழல், இராணுவ, மக்கள் தொகை வைத்து டாப் 10 பாதுகாப்பான நாடுகள் என்ற பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது. அவை,

பாதுகாப்பான நாடு

பாதுகாப்பான நாடு

அவை, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, ரஷ்யா, கஜகஸ்தான், பொலிவியா, நார்வே, பின்லாந்து, அர்ஜென்டினா மற்றும் சுவீடன்.

ஸோம்பி கதைகள்

ஸோம்பி கதைகள்

உலகின் அனைத்து பகுதிகளிலும் ஸோம்பிக்கள் பற்றிய கதைகள் பரவி இருக்கின்றன. ஆசியா, ஐரோப்பியா, அமெரிக்கா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் என மாடர்ன் ஸோம்பி கதைகள் அனைத்து பகுதிகளிலும் கூறப்படுகின்றன.

ஸோம்பி ரசிகர்கள்

ஸோம்பி ரசிகர்கள்

ஸோம்பி ரசிகர்களை "Zombophiles" என்று சொல்லை பயன்படுத்தி அழைக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lesser Known Zombie Facts

Do you know about the Surprising zombie fact? read here in tamil.
Subscribe Newsletter