உங்கள் பேஸ்புக் கணக்கில் இருந்து கட்டாயம் நீக்க வேண்டிய நண்பர்கள்!

By: Ashok CR
Subscribe to Boldsky

பேஸ்புக்கில் உங்கள் நண்பர்களின் போஸ்ட்டை பார்த்த பிறகு கோபமோ அல்லது சங்கடமோ ஏற்படுகிறதா? ஆம் எனில், உங்கள் நண்பர்கள் பட்டியலில் இருந்து இத்தகைய நபர்களை நீக்க வேண்டிய நேரம் இது. அதைப் பற்றி தான் நாம் பார்க்கவும் போகிறோம். நிஜ வாழ்க்கையில் நண்பர்களை எப்படி பார்த்து பார்த்து தேர்ந்தேடுக்கிறோமோ, அதேப்போல் தான் பேஸ்புக் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போதும் மிகுந்த கவனம் தேவை.

நம் வாழ்க்கையை நமக்கு வேண்டிய வழியில் வாழ்வதற்கான முழு உரிமையும் நமக்கு உள்ளது. உங்கள் வாழ்க்கையில் ஆபத்தை விளைவிக்கும் நபர்களுக்கு தேவையற்ற உதவிகளை செய்யக்கூடாது என்பது மிகவும் முக்கியமாகும். நாம் ஓய்வாக இருக்கும் போது சமூக வலைத்தளங்களை திறந்து, நமக்கு பிடித்த நண்பர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்வோம். இருப்பினும், தன்னுடைய புதிய கார், புதிய வீடு என புகைப்படங்களை இந்த ஊடகங்களில் பதிவேற்றி அலப்பரை கொடுக்கும் நண்பர்களைப் பார்க்கும் போது, நமக்கு அவ்வாறு வாழ்க்கையில் அமையவில்லையே என்ற காம்ப்ளக்ஸ் உணர்வு ஏற்படும்.

அதனால் பேஸ்புக் பக்கத்தில் உள்ள 'அன்ப்ரெண்ட்' என்ற நண்பர்களை நீக்கும் பட்டனை பயன்படுத்துவதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மன அமைதியை க்குலைக்கும் நண்பர்களை அவ்வாறு நீங்கள் நீக்கி விடவும் செய்யலாம். சமூக வலைத்தளங்களில் உங்களது மதிப்பும், நீங்கள் எந்தளவிற்கு சந்தோஷமாக உள்ளீர்கள் என்பதும் உங்கள் எண்ணம் மற்றும் குணத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என ஒரு ஆராய்ச்சி கூறியுள்ளது. அதனால் எந்த வகையான நண்பர்களை உங்கள் பேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பந்தா பேர்வழி

பந்தா பேர்வழி

பேஸ்புக்கில் உங்களுக்கு சில நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் தன் சந்தோஷமான வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு தருணத்தை பற்றியும் பதிவிடுவார்கள். தங்களின் ஆடம்பரமான குளியலறை முதல் சுற்றுலாக்கள் வரை அனைத்து புகைப்படங்களையும் பதிவேற்றுவார்கள். அவர்களின் எண்ணம், தங்கள் நண்பர்களிடம் பந்தா செய்வதே. இப்படிப்பட்ட நண்பர்கள் உங்களுக்குள் காம்ப்ளக்ஸ் உணர்வை தூண்டினால், அவர்களை உங்கள் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கி விடவும். நம்புங்கள், அதற்காக அவர்கள் ஒரு துளி கூட வருந்தப்போவதில்லை!

எதற்கெடுத்தாலும் வாதடுபவர்

எதற்கெடுத்தாலும் வாதடுபவர்

உங்கள் பேஸ்புக் கணக்கில் நீங்கள் சில நண்பர்களைக் கொண்டிருப்பீர்கள். அவர்கள் தாங்கள் கடந்து வரும் ஒவ்வொரு விஷயத்திற்கும் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். அரசியல், மதம் மற்றும் இதர சிக்கலான பிரச்சனைகளை சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடுவார்கள். சில நேரங்களில் மனதைப் புண்படுத்துகிற விஷயத்தையும், மோசமான வார்த்தைகளையும் கூட பயன்படுத்துவார்கள். அதனால் அவர்களால் நீங்கள் எந்தவொரு ஆபத்திலும் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, அவர்களை உங்கள் நண்பர்களின் பட்டியலில் இருந்து உடனே நீக்கி விடுங்கள்.

உங்கள் முதலாளி

உங்கள் முதலாளி

உங்கள் முதலாளியை பேஸ்புக் நண்பராக வைத்துக் கொள்வது நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாகும். என்னவாக இருந்தாலும் அவர் உங்கள் முதலாளி. உடம்பு சரியில்லை என சொல்லி விட்டு நீங்கள் ஆட்டம் போட்டது அவருக்கு தெரிந்து விடக்கூடாது அல்லது வேறு எதற்காவது விடுப்பு எடுத்ததை பற்றி அவர் இங்கே கேட்டு விடக்கூடாது அல்லவா!

விமர்சகர்

விமர்சகர்

நம் அனைவருக்கும் இத்தகைய விமர்சன பைத்தியமான நண்பர்கள் பேஸ்புக்கில் இருப்பார்கள். சமூக வலைத்தளங்கள் என்பதே சந்தோஷத்திற்காகவும், கேளிக்கையான மற்றும் விந்தையான படங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் தான். இருப்பினும், உங்களது நண்பர் இதனைப் புரிந்து கொள்ளாமல், நீங்கள் பகிரும் படங்களை விமர்சனம் செய்து கொண்டே இருப்பார். இவர்களை உங்கள் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்குவதை தவிர வேறு வழியுள்ளதா என்ன?

உங்கள் முன்னாள் காதலன்/காதலி

உங்கள் முன்னாள் காதலன்/காதலி

ஆம், நீங்கள் கேட்டது சரியே. உங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியை நண்பர்கள் பட்டியலில் இருந்து தூக்க வேண்டும். அது ஒன்றும் கொடுமையான விஷயம் கிடையாது. ஆனால் உங்களுக்கு நன்மையையே அளிக்கும். உங்கள் முன்னாள் காதலன்/காதலியை பேஸ்புக் நண்பராக வைத்திருப்பதால், பழைய நினைவுகளை மறக்க இயலாது. மேலும் உங்கள் வருங்கால உறவுகளில் சிக்கல்களை ஏற்படுத்தலாம். அதனால் அன்லைக் பட்டனை அழுத்தி விடுங்கள்.

பெருமையான பெற்றோர்கள்

பெருமையான பெற்றோர்கள்

உங்கள் பேஸ்புக் நண்பர்கள் பட்டியலில் சில பெருமையான பெற்றோர்கள் இருந்து, அவர்கள் தங்கள் குழந்தைகளின் படங்களை அடிக்கடி பதிவேற்றம் செய்தால், அவர்களை உடனே நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கி விடுங்கள். குழந்தைகளின் படங்கள் பார்ப்பதற்கு அழகாக தான் இருக்கும், ஆனால் நீங்கள் திருமணமாகி, இன்னும் குழந்தைகளுக்காக திட்டமிடவில்லை என்றால், அது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் துன்பங்களை ஏற்படுத்தலாம்.

அந்நியர்கள்

அந்நியர்கள்

கண்டிப்பாக உங்கள் பேஸ்புக் பக்கத்தில் இருக்கும் நண்பர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் இத்தகைய நபர்களாக தான் இருக்கும். அவர்களை நீங்கள் சந்தித்திருக்க கூட மாட்டீர்கள். அவர்களின் ப்ரெண்ட் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு எப்போதாவது சேட் செய்திருப்பீர்கள். உங்கள் பேஸ்புக் பக்கத்தில் உள்ள அனைத்து அந்நியர்களையும் முதலில் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்குங்கள். காரணம், அவர்களின் பின்புலம் தெரியாமல் அவர்களுடன் நட்பு பாராட்டுவது நல்லதல்ல. நேரில் அந்நியர்களுடன் பேசாத நீங்கள் பேஸ்புக்கில் மட்டும் அவர்களை ஏன் நண்பர்களாக்கி கொள்ள வேண்டும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Subscribe Newsletter