சாக்லேட் திருடி திண்ணது ஒரு குத்தமா, எச்.ஆரிடம் சிக்கி தவித்த ஐ.டி ஆண்மகன்!

Posted By:
Subscribe to Boldsky

வெளியிருந்து பார்க்கும் போது அனைவரும் பொறாமைப்படும் துறையாக இருப்பது ஐ.டி துறை தான். பெரிய, பெரிய கண்ணாடி பில்டிங், ஸ்டைலிஷான வாழ்க்கை, வெளிநாட்டு பயணம், அழகழகான பெண்கள், கைநிறைய சம்பளம், சுகபோக வாழ்க்கை என ஐ.டி துறைதான் சிறந்தது என வெளிநபர்கள் கூறுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

இரவு, பகல் பார்க்காத வாழ்க்கை, டார்கெட் முடியவில்லை என்றால் பி.பி (BP) எகிற வைக்கும் சூழல். சொல்லாமல், கொள்ளாமல் எப்போது வேண்டுமானாலும் வேலை பிடுங்கப்படலாம் என்ற அச்சம், வீட்டில் சரிவர நேரம் செலவழிக்க முடியாத வருத்தம் என அவர்களுக்கும் நிறைய குறைகள் இருக்கின்றன.

ஏறத்தாழ சாப்பாடு, பானம், ஜிம், விளையாட்டு இடங்கள், ரெஸ்ட் எடுக்க தனி அறைகள் என சில சுகபோக விஷயங்களும் இருக்கின்றன. இதில் ஒன்றில் கைவைத்து மாட்டிக்கொண்ட ஒரு இளைஞரின் வேடிக்கையான கதை தான் இது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எச்சரிக்கை!

எச்சரிக்கை!

யாரோ இரு நபர் சாக்லேட் திருடி சாப்பிடுவதை அறிந்த பெண் ஊழியர், ஃப்ரிட்ஜ் கதவிலேயே எச்சரிக்கை அறிவிப்பும் எழுதி வைத்திருக்கிறார்.

விளையாட்டு புள்ள!

விளையாட்டு புள்ள!

சாக்லேட் திருடி சாப்பிட்டது மட்டுமின்றி, இம்ப்ரஸ் செய்கிறேன் என்றே பேர்வழியாக, எனக்கு டார்க் சாக்லேட் தான் பிடிக்கும், அடுத்த முறை அதை வங்கி வையுங்கள் என கூறியிருக்கிறார் அந்த ஆண்.

நியாயமா?

நியாயமா?

இதெல்லாம், நியாயமா? நல்ல நடத்தையா, ஒழுங்காக என் சாக்லேட் திரும்பி வைத்துவிடு என அந்த பெண் பதிலுக்கு ஓட்டியுள்ளார்.

மணிக்கு ஒன்று!

மணிக்கு ஒன்று!

டியர் சாக்லேட் உரிமையாளர் அவர்களே, எனக்கு டார்க் சாக்லேட் வராவிட்டால், ஒவ்வொரு பீஸாக சாப்பிட்டு விடுவேன் என புகைப்படத்துடன் பதில் அளித்துள்ளார் என ஆண்.

ஏன் இப்படி?

ஏன் இப்படி?

சாக்லேட் திருடா, நீ ஏன் இப்படி பண்ற? என அதட்டியுள்ளார் அந்த பெண்.

நேரம் ஓடுகிறது...

நேரம் ஓடுகிறது...

டிக்.. டிக்... டிக்.... நேரம் ஓடுகிறது, தான் கேட்டது எப்போது வரும் என திட்டியதை காதில் வாங்காமல் மீண்டும் ஸ்டிக்கர் ஓட்டியுள்ளார் சாக்லேட் "திருடர்!"

எச்.ஆர் வருகை!

எச்.ஆர் வருகை!

ப்ரிட்ஜ் கதவு முழுக்க இப்படி பேப்பர் ஒட்டியிருப்பதை பார்த்து படித்த எச்.ஆர் அந்த ஆணை கண்டித்துள்ளார்.

ஐம் வெயிட்டிங்!

ஐம் வெயிட்டிங்!

இன்னும் நான் கேட்ட டார்க் சாக்லேட் வரவில்லை என எச்.ஆர் அறிவிப்புக்கு மேலே அந்த ஆண் பதிலளித்துள்ளார்.

கன்றாவி!

கன்றாவி!

நீ மிகவும் கேவலமானவன் என்பது போல கூறி, சாக்லேட் இழந்த பெண் பதில் கூறியுள்ளார்.

வட போச்சே!

வட போச்சே!

இப்படியே மாறி, மாறி ஸ்டிக்கர் ஒட்ட, சாக்லேட் முழுதும் தின்று ஏப்பம் விட்டது தான் மிச்சம்.

கிடுக்குப்பிடி !

கிடுக்குப்பிடி !

எச்.ஆர் வந்த பிறகு, யார் யார், பிரிண்ட் எடுக்கிறார்கள் என்பது வேவு பார்த்து, அந்த நபரை கண்டுப்பிடித்துவிட்டார்.

வேலை போயிடுமோ!

வேலை போயிடுமோ!

கடைசியாக அந்த ஆண், தயவு செய்து இதற்கெல்லாம் வேலையில் இருந்து அனுப்பிவிட வேண்டாம் என கெஞ்சியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

An IT Person Stole Chocolate of Some Girl and Caught To HR

A IT Person Stole Chocolate of Some Girl and Caught To HR, A funny print out chat.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter