மாலை வேளையில் ஏன் தூங்கக்கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா?

By: Babu
Subscribe to Boldsky

இந்து மத பாரம்பரியத்தின் படி, ஒரு நாளில் அதிகாலை மற்றும் மாலைப் பொழுது மிகவும் முக்கியமானது. இதற்கு பகலும் இரவும் ஒன்றையொன்று சந்திக்கும் போது, தேவர்கள் நம் வீட்டினுள் புகுந்து ஆசீர்வாதங்களை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை தான் காரணம்.

இதனால் தான் இந்நேரங்களில் பெரியோர்கள் தூங்கிக் கொண்டிருந்தால், திட்டுவார்கள். அதுமட்டுமின்றி, மாலைப் பொழுதில் தூங்குவதால் ஆரோக்கிய பிரச்சனைகளும் ஏற்படக்கூடும். சரி, இதைப் பற்றி சற்று விரிவாய் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நல்ல சக்தியை வரவேற்கும் நேரம்

நல்ல சக்தியை வரவேற்கும் நேரம்

காலம் காலமாக மாலை வேளையில் சூரியன் மறையும் போது, அனைவரது வீடுகளிலும் விளக்குகளை ஏற்றி பூஜை செய்வது வழக்கம். இதற்கு இருட்டான இடத்தில் தீய சக்திகள் குடிப்புகும். இந்த தீய சக்திகளை வீட்டில் இருந்து வெளியேற்றி, நல்ல சக்தியை வீட்டினுள் வரவேற்க மாலை நேரங்களில் விளக்குகள் ஏற்றப்படுவதாக மக்களால் நம்பப்படுகிறது.

கடவுள் வருகை நேரம்

கடவுள் வருகை நேரம்

மாலை வேளையில், மக்களை ஆசீர்வதிப்பதற்காக ஒவ்வொருவரின் வீட்டிற்கும் துர்கை, லட்சுமி மற்றும் சரஸ்வதி வருகை தருவார்களாம். இதனால் தான் மாலையில் கடவுளைத் தொழும் பணியில் ஈடுபடுவதை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தார்களாம். அதுமட்டுமின்றி, அன்றைய தினம் சிறப்பாக அமைந்ததற்கு கடவுளுக்கு நன்றி செலுத்தவும் வீட்டில் விளக்குகளை ஏற்றி கடவுளைத் தொழுகிறோமாம்.

சோம்பேறித்தனம் அதிகரிக்கும்

சோம்பேறித்தனம் அதிகரிக்கும்

ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று குணங்கள் இருக்கும். அவை சத்வா, ரஜஸ் மற்றும் தமஸ் என்னும் நேர்மறை, ஆக்கிரோஷம் மற்றும் மந்தம் போன்றவை. இதில் ஒருவர் மாலை வேளையில் தூங்கும் போது மந்த நிலை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

உடலுக்கு நல்லதல்ல

உடலுக்கு நல்லதல்ல

எவ்வளவு தான் தூக்கம் இன்றியமையாததாக இருந்தாலும், மாலை வேளையில் தூங்கி எழுந்தால் அவர் மேன்மேலும் தான் சோர்வை உணரக்கூடும். அதுமட்டுமின்றி மாலையில் தூக்கத்தை மேற்கொண்டவர்களுக்கு இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது. இப்படி தூக்கத்தில் இடையூறு ஏற்பட்டால், அதுவே பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

செரிமான பிரச்சனை அதிகரிக்கும்

செரிமான பிரச்சனை அதிகரிக்கும்

மாலை வேளையில் தூங்கும் போது, செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு, செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், மாலையில் விளக்கு ஏற்றிய பின் தூங்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்

குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்

தற்போது பல குடும்பங்கள் பிரிவதற்கு துணையுடன் போதிய நேரத்தை செலவிட முடியாதது தான். மாலை வேளையில் அருமையான மற்றும் அமைதியான சூழ்நிலையில் தூங்குவதற்கு பதிலாக, உங்கள் துணையுடன் சிரித்துப் பேசி நேரத்தை செலவிடுங்கள். இதனால் குடும்ப ஆரோக்கியம் மேம்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why We Should Not Sleep In Evening

Why We Should Not Sleep In Evening? Read more to know....
Story first published: Thursday, October 29, 2015, 16:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter