Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
பண்டையக்கால எகிப்து மம்மிக்களின் மர்மமான இரகசியங்கள்!!
பண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இப்பூவுலக உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை இருந்தமையால், அரசர்களின் சடலங்கள் பதனிடப் பட்டன. மனிதர்களின் சடலங்கள் மட்டுமல்லாது முதலை, பூனை ஆகியவற்றின் சடலங்களும் பதனிடலாக்கப் பட்டன.
பண்டைய கிரேக்க வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பிலிருந்து பாரசீகத்தில் சில அரசர்களின் சடலங்களும் மெழுகை பயன்படுத்தி பதனிடலாக்கப் பட்டதாக தெரிய வருகிறது. எகிப்திய மம்மிகளே பொதுவாக அறியப்பட்டாலும், பதனிடலில் தொன்மையானவர்களாக கருதப்படுவோர், தென் அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் பெரு நாட்டில் வாழ்ந்த சின்சொரோ மக்களே. ஆயினும் எகிப்து மம்மிக்களின் பின்னணியில் பல மர்மங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.
இவற்றை ஆராய்ச்சி செய்ய முயன்ற ஆராய்ச்சியாளர்கள் யாரும் உயிருடன் திரும்பியதில்லை என்றும் கூறுகிறார்கள். அப்படி பண்டையக்கால எகிப்து மம்மிக்கள் எப்படி பதனிடப் பட்டன, அவற்றோடு என்னவெல்லாம் இருந்தது என்பது பற்றி இனிப் பார்க்கலாம்...

சின்சொரோ மம்மிகள்
சின்சொரோ மம்மிகள், எகிப்திய மம்மிகளை விட பல ஆயிரம் ஆண்டு தொன்மையானவை.

5500 வருடங்கள் பழமையான மம்மி
பழமையான மம்மி நடு சகாராவில் உள்ள உன் முகுக்கியாக் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் மம்மியாகும். இம்மம்மியின் அகவை சுமார் 5500 வருடங்களாகும்.

கேவட்டி இல்லாத மம்மி
கிங் டீட்டு என்ற மன்னனின் மம்மியில் பல் சொத்தை, கேவட்டி ஒன்று கூட இல்லையாம். அந்த அளவு பாதுகாப்பாக உடல் பதனிடப் பட்டுள்ளது.

துணி கட்டுதல்
ஒவ்வொரு மம்மியின் உடலையும் ஏழு துணிக் கொண்டு கட்டப்பட்டிருக்குமாம்.

மூன்று நபர்கள்
ஒவ்வொரு உடலையும் மம்மியாக பதனிடப் படும் போது, மூன்று நபர்கள் அந்த செயல்பாட்டில் அமர்த்தப்படுகிறார்கள்.

மம்மிக்கு பாஸ்போர்ட்
ராம்செஸ் எனும் மம்மிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதன் இருப்பிடத்தில் இருந்து பிரான்ஸ் கொண்டு செல்ல பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

நான்கு உறுப்புகளை அகற்றைவிடுவர்கள்
நுரையீரல், கல்லீரல், வயிறு, குடல் போன்ற உடல் பாகங்களை அகற்றிவிட்டு தான் மம்மியாக பதனிடுவார்களாம்.

எழுவது நாட்கள்
ஓர் மம்மியை முழுவதாக பதனிடப்படுத்த எழுபது நாட்கள் தேவைப்படுமாம். இந்த மம்மியோடு சேர்ந்து அவர் உபயோகித்த, விரும்பிய பொருட்கள், ஆபரணங்கள், உதவிக்கு ஆட்களும் சேர்த்து அந்த மம்மியோடு இருப்பார்கள்.

63 கல்லறைகள்
இதுவரை எகிப்து பகுதிகளில் 63 அரச மம்மிக்களின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆறு தேர்கள்
கிங் டீட்டு என்ற அரசரின் கல்லறையில் மட்டும் ஆறு தேர்கள் சேர்த்து கல்லறைக்குள் மம்மியாக பதனிடப்படுத்தப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications