ஒன்றிற்கு மேற்பட்ட இதயங்களைக் கொண்ட உயிரினங்கள் எவையென்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உலகில் வாழும் எந்த ஒரு உயிரினத்திற்கும் இதயம் மிகவும் முக்கியமான ஒன்று. பலரும் அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே ஒரு இதயம் தான் உள்ளது என்றும், அது அளவில் சிறியதாக இருக்கும் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உலகில் உள்ள விலங்குகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு ஒன்றிற்று மேற்பட்ட இதயங்கள் உள்ளது. சில உயிரினத்திற்கு இதயமே இல்லை.

உலகில் உள்ள விசித்திரமான உயிரினங்கள்!!!

நம்பமுடியவில்லை தானே! நிச்சயம் உங்களுக்கு இது ஆச்சரியமாகத் தான் இருக்கும். இங்கு அப்படி உலகில் உள்ள வினோதமான இதயங்களைக் கொண்ட உயிரினங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நம்ப முடியாத சில விசித்திரமான உண்மைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூன்று அறையுள்ள இதயம்

மூன்று அறையுள்ள இதயம்

பாலூட்டிகள் மற்றும் பறவைகளுக்கு 4 அறைகள் கொண்ட இதயம் தான் இருக்கும். ஆனால் தவளைக்கோ 3 அறையுள்ள இதயம் உள்ளது. அதில் 2 ஆரிக்கிள்களும், 1 வெண்ட்ரிக்கிள்களும் உள்ளன.

சிறிய அளவு கார் எடையுள்ள இதயம்

சிறிய அளவு கார் எடையுள்ள இதயம்

மனித இதயத்தின் எடை 0.3 கிலோகிராம். ஆனால் உலகிலேயே மிகப்பெரிய விலங்கான திமிங்கலத்தின் இதய எடை எவ்வளவு தெரியுமா? சிறிய அளவுள்ள காரின் எடை, அதாவது 430 கிலோகிராம் எடையுள்ள இதயத்தை திமிங்கலம் கொண்டுள்ளது.

இதயம் இல்லா உயிரினம்

இதயம் இல்லா உயிரினம்

இதயம் இல்லாமல் எந்த ஒரு உயிரினமும் உயிர் வாழ முடியாது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஏனெனில் மண்புழுவிற்கு இதயமே கிடையாது. அதன் ஒவ்வொரு உடல் கட்டுக்கு கிளைவிடும் கிளைக்குழாய்களும், உடல் முழுவதும் பாயும் நீளமான நாளங்களும் உள்ளதே தவிர, தனி உறுப்பாக இதயம் என்ற ஒன்று இல்லை.

வரிக்குதிரைமீன்

வரிக்குதிரைமீன்

வரிக்குதிரைமீனுக்கு உடைந்த இதயம் உள்ளது. அதாவது இதனால் இதயத்தை மீண்டும் உருவாக்க முடியும். 2002 ஆம் ஆண்டு நடந்த ஆய்வில், வரிக்குதிரைமீன்கள் 20 சதவீதம் இதயம் பாதிக்கப்பட்ட பின், இரண்டு மாதத்திற்குள் இதய தசைகளை மீண்டும் உருவாக்க முடியும் என்பது தெரிய வந்தது. எப்படி பல்லிக்கு வால் வெட்டப்பட்டுவிட்டால், மீண்டும் அதனால் வாலை உருவாக்க முடியுமோ, அதேப் போல் தான் வரிக்குதிரைக்கு இதயத் தசைகளை உருவாக்க முடியும்.

3 இதயங்கள்

3 இதயங்கள்

மூன்று இதயங்களைக் கொண்ட உயிரினங்கள் எது தெரியுமா? எட்டு கால்களைக் கொண்ட ஆக்டோபஸ், கட்டுல் மீன், ஸ்குவிட் போன்றவை.

4 இதயங்கள்

4 இதயங்கள்

ஹாக்மீன் (Hagfish) கடலுக்கு அடியில் வாழும் ஒருவித அறுவெறுக்கத்தக்க வகையிலான கோழைப் போன்றதை சுரக்கும் சக்தி கொண்டது. இதற்கு 4 இதயங்கள் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Strangest Hearts In The Animal Kingdom

Here are some strangest hearts in the animal kingdom. Take a look....