உலகின் சொகுசு நாடான துபாய் பற்றிய சில விசித்திரமான தகவல்கள் !!!

By: John
Subscribe to Boldsky

ஓர் காலத்தில் எண்ணெய் கிணறுகளும், ஒட்டகம் மேய்க்கும் இடமாகவும் இருந்த துபாய், இப்போது உல்லாச உலகின் தலைநகரமாக இருக்கிறது. இன்றைய உலகில் உழைக்க மட்டுமின்றி பிழைக்கவும் தெரிந்திருக்க வேண்டும், இல்லையேல் உங்கள் உழைப்பு வேறொருவன் கஜானாவை நிறைத்துவிடும்.

"மல்லூஸ்" மிகவும் பிடித்தமானவர்களாக இருப்பதற்கான காரணங்கள்!!!

இன்றைய சில அல்ட்ரா மாடர்ன் ஜீவராசிகளின் வாழ்நாள் குறிக்கோளாக இருப்பது துபாயை சுற்றிப் பார்ப்பதாக இருக்கிறது. அப்படி என்ன இருக்கிறது துபாயில்? என்ன இல்லை துபாயில், எண்ணெயைக் கொண்டு ஒட்டுமொத்த உலகையும் விலைக்கு வாங்கிவிட்டது துபாய்.

இந்திய புராணங்களில் இருந்து பிறந்த அறிவியல் கண்டுப்பிடிப்புகள்!!!

இனி, துபாய் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்துப் பார்க்கலாம்....

கருட புராணத்தில் கூறப்பட்டுள்ள கொடிய தண்டனைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சொகுசு கார்கள்

சொகுசு கார்கள்

பெர்ராரி, பென்ட்லி, லேம்போர்கனி போன்ற உலகின் சொகுசு கார்கள் எல்லாம் துபாயில் போலீஸ்காரர்கள் சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பென்ஸ்கார் கூட பயன்படுத்துகிறார்கள்

மிக விரைவாக மாற்றம் கண்ட நகரம்

மிக விரைவாக மாற்றம் கண்ட நகரம்

பத்து வருடங்களுக்குள் மிகப் பெரிய மாற்றம் கண்ட உலகின் சிறந்த இடமாக திகழ்கிறது துபாய் நகரம்.

கற்பழிக்கப்பட்டவருக்கு சிறை தண்டனை

கற்பழிக்கப்பட்டவருக்கு சிறை தண்டனை

தொழில் ரீதியாக துபாய்க்கு சென்ற சில பெண்கள் கற்பழிக்கப்பட்டது மட்டுமின்றி, குற்றம் சாட்டியதற்காக தண்டனையும் வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக நார்வே நாட்டை சேர்ந்த மர்டே டேபோராஹ் டேல்வ் என்ற பெண்மணி, தன்னை கற்பழித்ததாக தனது சக ஊழியர் மீது குற்றம்சாட்டியதற்காக, அந்த பெண்மணிக்கு 16 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கபப்ட்டதாம்.

பத்திரிகையாளர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்

பத்திரிகையாளர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்

துபாயை சேர்ந்த ஓமர் போர்கன் அல்-காலா என்ற பத்திரிக்கையாளர் மிகவும் அழகாக இருந்ததனால், சவுதி அரேபியாவை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பளுதூக்கும் இயந்திரம்

பளுதூக்கும் இயந்திரம்

உலகில் உள்ள ஐந்தில் ஓர் பளுதூக்கும் இயந்திரம் துபாயில் இருக்கிறதாம். எண்ணில் அடங்காமல் உயர்ந்துக் கொண்டே போகும் அந்நாட்டின் வானுயர் கட்டிடங்களின் கட்டுமானங்களே இதற்கு காரணம்.

 செயற்கை தீவுகள்

செயற்கை தீவுகள்

துபாய், இன்று உலாச உலகமாக இருப்பதற்கு காரணமே, செயற்கையாக உருவாக்கப்பட்ட பனைமரத் தீவுகள் தான். இந்த செயற்கை தீவை கட்டிமுடிக்க ஏறத்தாழ 125 மெட்ரிக் க்யூப் மணல் பயன்படுத்தப்பட்டதாம்.

எண்ணெய் வளம்

எண்ணெய் வளம்

துபாயின் மொத்த வருவாயில், எண்ணெய் வளத்தின் ஏற்றுமதி மூலம் கிடக்கும் வருவாய் வெறும் 6% தானாம். மற்றவை எல்லாம் சுற்றுலா மற்றும் எஸ்டேட் மூலமாக தான் வருகிறதாம்.

பூர்ஜ்-அல்-அரப்

பூர்ஜ்-அல்-அரப்

பூர்ஜ்-அல்-அரப் எனும் இடத்தில் 46,265 மோனலிசா ஓவியங்களை 1,709 மெட்ரிக் ஸ்கொயர் 24 காரட் தங்க இலைகள் பயன்படுத்தி அழகு சேர்த்துள்ளனர். பூர்ஜ்-அல்-அரப் உட்பகுதி முழு உள்ளலங்கார வேலைபாடுக்கு இவ்வளவு தங்கத்தை செலவு செய்துள்ளனர்.

வெளிநாட்டு ஆட்கள்

வெளிநாட்டு ஆட்கள்

துபாயின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 85% பேர் வெளிநாட்டு நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் வேலை விஷயமாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மக்கள் தான் இங்கு இருக்கின்றனர்.

ஒட்டக பந்தயத்திற்கு ரோபோட்கள்

ஒட்டக பந்தயத்திற்கு ரோபோட்கள்

பல மில்லியன் டாலர்கள் புரளும் விளையாட்டான ஒட்டக பந்தயத்தில், அவைகளை ஓட்ட ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் ரோபோக்களின் விலை மட்டும் 300 - 10,000 அமெரிக்க டாலர்கள்.

2,250 டன் தங்கம்

2,250 டன் தங்கம்

2013ஆம் ஆண்டு மட்டும் 2,250 டன் தங்கத்தை ஒட்டுமொத்தமாக வர்த்தகம் செய்தது துபாய். இது 354 யானைகளின் எடைக்கு சமமாகும்.

ஹோட்டல் வாடகை

ஹோட்டல் வாடகை

ஆடம்பர ஹோட்டலான பூர்ஜ் அல்-அரபில் ஓர் இரவு தங்க 20,000 டாலர்கள் வசூலிக்கப்படுகிறது. இந்த பணத்தை வைத்து ஓர் உலக சுற்றுலாவே சென்று வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் 13 கார்கள்

வெறும் 13 கார்கள்

1968ஆம் ஆண்டு துபாயில் வெறும் 13 கார்கள் தான் இருந்ததாம். ஆனால், இன்று போக்குவரத்து நெரிசல் பிரச்சனை தாளாமல், இரண்டடுக்கு சாலைகளில் பயணம் செய்து வருகின்றனர்.

உலகின் உயரமான டென்னிஸ் மைதானம்

உலகின் உயரமான டென்னிஸ் மைதானம்

உலகின் மாபெரும் ஆடம்பர ஹோட்டலான பூர்ஜ் அல்-அரபின் உச்சியில் உள்ள டென்னிஸ் கோர்ட் தான் உலகில் உயராமனது ஆகும். இங்கு அகேசி மற்றும் பெடரர் (Andre Agassi and Roger Federer) முதல் ஆட்டத்தை ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.சி பேருந்து நிறுத்தங்கள்

ஏ.சி பேருந்து நிறுத்தங்கள்

வெயிலின் தாக்கம் தாள முடியாதலால், துபாயிலுள்ள பேருந்து நிறுத்தங்கள் ஏ.சி வசதி செய்யப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts About Dubai The City of Luxury

Do you know the facts about the luxurious country of the world, dubai? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter