For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க தேநீரை ஆரோக்கியமானதாக மாற்ற இந்த பொருட்களில் ஒன்றை அதில் சேர்த்தால் போதுமாம்...!

மழை வரும்போதெல்லாம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது தேநீர்தான். இந்த காம்பினேஷனை ஒருபோதும் அடித்துக்கொள்ள முடியாது.

|

மழை வரும்போதெல்லாம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது தேநீர்தான். இந்த காம்பினேஷனை ஒருபோதும் அடித்துக்கொள்ள முடியாது. மழை இல்லாவிட்டாலும் அனைவரின் வாழ்க்கையிலும் தேநீர் இன்றியமையாத ஒரு அங்கமாக மாறிவிட்டது. மழைக்காலம் வரும் போதெல்லாம் இருமல், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் உடன் அழைத்து வருகிறது.

Teas to Drink for a Healthier Body in Tamil

மழைக்கால நோய்த்தொற்றுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி, உங்கள் வழக்கமான தேநீரில் சில மாற்றங்களைச் செய்வதே ஆகும், இது தேநீரை சுவையாக மாற்றுவது மட்டுமல்லாமல் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இந்த பொருட்களை உங்கள் டீயில் சேர்ப்பதால், தொண்டையில் அரிப்பு ஏற்படுவதைத் தடுப்பதுடன் கடுமையான சளி அல்லது இருமலில் இருந்தும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏலக்காய்

ஏலக்காய்

பச்சை ஏலக்காய் தேநீரில் சேர்க்கப்படும் மிகவும் பொதுவான மசாலா ஆகும். இந்த மசாலா முதலில் ஒரு நசுக்கப்பட்டு பின்னர் தேநீரில் சேர்க்கப்படுகிறது. இது அது வழங்கும் நன்மைகளை பன்மடங்கு அதிகரிக்கிறது மற்றும் டீயை மேலும் நறுமணமாக்குகிறது. ஏலக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, வீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறது, மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் எடை இழப்புக்கு கூட உதவுகிறது.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியையும், இந்தியர்களையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. அந்த அளவிற்கு இஞ்சி தினமும் நம் உணவுடன் கலந்துள்ளது. உங்களுக்கு பொதுவாக இஞ்சி டீ பிடிக்கவில்லை என்றாலும் மழைக்காலத்திலாவது குடிக்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், பொதுவான சளி-இருமல் மற்றும் இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கும். நீங்கள் இஞ்சியை சிறிய துண்டுகளாக நறுக்கி உங்கள் தேநீரில் சேர்க்கலாம். 5-6 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்கவைத்தப் பின், இஞ்சியானது அதன் அனைத்து சாறுகளையும் தண்ணீரில் வெளியிடும்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை ஆக்ஸிஜனேற்ற பண்புகளுடன் நிரம்பியுள்ளது மற்றும் பெரும்பாலும் இந்தியாவிற்கு வெளியே தேநீர் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இலவங்கப்பட்டை இயற்கையில் வெப்பமானது மற்றும் உடலை சூடாக வைத்திருக்கிறது, இது பருவமழை மற்றும் குளிர்கால மாதங்களுக்கு ஏற்றதாக அமைகிறது. இதனால்தான் இலவங்கப்பட்டைகிறிஸ்துமஸ் காலக்கட்டத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தேநீரைக் கொதிக்க வைக்கும் போது ஒரு அங்குல இலவங்கப்பட்டையைச் சேர்த்து, டீயில் ஒரு காரமான சுவையையும், கவர்ச்சியான நறுமணத்தையும் சேர்க்கலாம்.

துளசி

துளசி

துளசி இந்திய தேயிலை தயாரிப்புகளில் கிட்டத்தட்ட ஈடுசெய்ய முடியாத பகுதியாகும். தேநீருடன் துளசியின் சேர்க்கை அத்தகைய கலவையை உருவாக்குகிறது, அது உண்மையில் ஆன்மாவுக்கு திருப்தி அளிக்கிறது. துளசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது, சிறுநீரக கற்களை கரைக்கிறது மற்றும் சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. ஒரு கப் தேநீருக்கு 4-5 துளசி இலைகள் அதன் மேஜிக்கை செய்ய போதுமானது.

அன்னாசி பூ

அன்னாசி பூ

உங்கள் தேநீர் காரமான சுவையுடன் இருக்க விரும்பினால், நீங்கள் நிச்சயமாக அன்னாசி பூவை முயற்சி செய்ய வேண்டும். இந்த தனித்துவமான இந்திய மசாலா அழகாக இருப்பது மட்டுமல்லாமல், சுவாச பிரச்சனைகளுக்கு சிகிச்சையளித்தல், செரிமானத்திற்கு உதவுதல் மற்றும் பூஞ்சை தொற்றுகளைத் தடுப்பது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இது தேநீரில் ஒரு தீவிர லைகோரைஸ் சுவையை சேர்க்கிறது மற்றும் இலவங்கப்பட்டை, பச்சை ஏலக்காய், துளசி மற்றும் இஞ்சி ஆகியவற்றுடன் நன்றாக ஜெல் செய்கிறது, அதாவது மசாலா டீ தயாரிக்க இந்த பொருட்கள் அனைத்தையும் சேர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Teas to Drink for a Healthier Body in Tamil

Check out the best herbal teas to drink for a healthier body.
Story first published: Monday, August 22, 2022, 16:40 [IST]
Desktop Bottom Promotion