Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மார்ச் 03 முதல் இந்த 3 ராசிக்கு ராஜயோகம் அடிக்கப்போகுது...
Mars Transit In Sadayam Nakshatra 2026: ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். அதோடு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
தற்போது செவ்வாய் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 03 ஆம் தேதி செவ்வாய் சதயம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த சதயம் நட்சத்திரத்தின் அதிபதி ராகு. நிழல் கிரகமான ராகுவின் நட்சத்திரத்திற்கு செவ்வாய் செல்வதால், அதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.

ஜோதிடத்தில், சதயம் நட்சத்திரமானது மாய விஷங்கள், ஆராய்ச்சி, மருத்துவம், தொழில்நுட்பம், அமானுஷ்ய அறிவு ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஒரு செல்வாக்குமிக்க கிரகம் இந்த நட்சத்திரத்திற்குள் நுழையும் போது, அது வாழ்வில் திடீர் மாற்றங்கள், புதிய திசைகள் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைக் கொண்டு வரும். இப்போது செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் அல்லது பதவி உயர்வுகள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய திட்டங்களால் தொழிலதிபர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். நிதி நிலைமை மேம்படும். தன்னம்பிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
தனுசு
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மனநிலை மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
கும்பம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் சதயம் நட்சத்திரமானது சனி பகவான் ஆளும் கும்பத்தில் உள்ளது. இதனால் ஐடி, ஆராய்ச்சி, மருத்துவ துறையில் இந்த ராசிக்காரர்கள் இருந்தால், நல்ல பலன்களைப் பெறுவார்கள். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக நடக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications