Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
செவ்வாய் பெயர்ச்சியால் பிப்ரவரி 23 முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றியும், பணமும் குவியும்..
Mars Transit In Aquarius 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். கிரகங்களில் செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். தற்போது செவ்வாய் தனது உச்ச ராசியான மகர ராசியில் உள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 23 ஆம் தேதி சனி பகவானின் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ராசியில் செவ்வாய் ஏப்ரல் 02 ஆம் தேதி வரை இருப்பார்.
செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதுவும் இந்த செவ்வாய் பெயர்ச்சி இன்னும் சிறப்பானது. ஏனெனில் செவ்வாய் கும்ப ராசியில் நுழையும் போது, ஏற்கனவே அந்த ராசியில் சூரியன், புதன், சுக்கிரன், ராகு போன்ற கிரகங்கள் இருக்கும்.

இதனால் செவ்வாய் நுழையும் போது 5 கிரகங்களின் சேர்க்கையால் பஞ்சகிரக ராஜயோகம் உருவாகவுள்ளது. கூடுதலாக குரு பகவான் மிதுன ராசியில் இருந்து தனது ஒன்பதாவது பார்வையை செலுத்துகிறார். ஆகவே இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் எதிர்பாராத அளவில் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை காணவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் ஒரு பெரிய நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் பயணங்களை மேற்கொள்வீர்கள். முக்கியமாக செவ்வாயின் அருளால் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை காண்பார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் எதிர்பாராத வகையில் லாபத்தைப் பெறுவார்கள்.
வணிகர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மொத்தத்தில் தொழில் ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கும். எந்த வேலையை செய்தாலும், அதில் நல்ல வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
