Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சூரிய பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Sun Transit In Aquarius 2026: ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார் மற்றும் இவர் ஒரு முழு சுழற்சியை முடிக்க 12 மாதங்கள் ஆகும். மேலும் சூரியன் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
இந்நிலையில் சூரியன் பிப்ரவரி 13 ஆம் தேதி சனி பகவானின் மகர ராசியில் இருந்து வெளியேறி, கும்ப ராசிக்குள் நுழைந்தார். இந்த சனி சூரியனின் எதிரியாக கருதப்படுகிறது. எனவே இந்த சூரிய பெயர்ச்சியால் மன அழுத்தம் அதிகரிக்கும். அதுவும் இந்த கும்ப ராசியில் ஏற்கனவே ராகு உள்ளார். இதனால் இந்த சூரிய பெயர்ச்சியால் கும்ப ராசியில் ராகு மற்றும் சூரியனின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது.

ஜோதிடத்தில் இந்த சேர்க்கையானது ஒரு அசுப நிகழ்வாக கருதப்படுகிறது. அதுவும் இப்படியான நிலை மார்ச் 14 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இதனால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமாக இருக்கப் போகிறது. இப்போது கும்ப ராசிக்குள் நுழைந்துள்ள சூரியனால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் மனக் குழப்பம் அதிகரிக்கும். உறவுகளில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் எந்த ஒரு அவசர முடிவுகளை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். பண பரிவர்த்தனைகளை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்பாராத அளவில் பண இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறு வெற்றியையும் பெற வேண்டுமானால் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். நிறைய ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. தகவல் தொடர்புகளில் நிதானத்தைக் கடைப்பிடக்க வேண்டும். மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வால் சிரமப்படக்கூடும். உண்ணும் உணவுகளில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சவாலானதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். முதலீடுகளில் இழப்புக்களை சந்திக்க நேரிடும். பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். வாக்குவாதங்கள் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு மற்றும் பொறுப்புக்கள் அதிகரிக்கும். இதுப்போன்ற சூழலில் திட்டமிட்டு செயல்படுவது நன்மை பயக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


