Latest Updates
-
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது..
மார்ச் மாதத்தில் அஸ்தமனமாகும் சனி பகவான்: அடுத்த 40 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
Shani Asta In Pisces 2026: நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி மிகவும் செல்வாக்குமிக்க கிரகங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சனி பகவான் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். அதோடு அவ்வப்போது தனது நிலைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துவார். இப்படி சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும்.
தற்போது சனி பகவான் மீன ராசியில் சுமார் 30 ஆண்டுகள் கழித்து பயணித்து வருகிறார். குரு பகவானின் ராசியில் சனி பகவான் பயணிப்பதால் சில ராசிக்காரர்கள் ஏழரை சனி, அஷ்டம மற்றும் அர்தாஷ்டம சனியின் விளைவுகளை சந்திக்க நேரிடும். சனி பகவான் இந்த மீன ராசியில் 2027 ஆம் ஆண்டு வரை இருப்பார்.

இந்நிலையில் சனி பகவான் மார்ச் 11 ஆம் தேதி மீன ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். அதாவது சற்று பலவீனமான நிலையில் இருப்பார். இதனால் சில ராசிக்காரர்கள் சனியின் மோசமான விளைவுகளில் இருந்து சற்று நிவாரணம் பெறவுள்ளார்கள்.
வேத நாட்காட்டியின் படி, சனி பகவான் மார்ச் 11 ஆம் தேதி மீன ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். இந்நிலையில் சுமார் 40 நாட்கள் இருந்து, பின் ஏப்ரல் 22 ஆம் தேதி உதயமாகவுள்ளார். இக்காலத்தில் சனி பகவான் சுக்கிரனுடன் இணைந்திருப்பார். அதோடு புதன், செவ்வாய் மற்றும் சூரியனுடனும் ஒன்றிணைந்து இருப்பார்.
இப்படி சனி பகவான் அஸ்தமனமாவதால் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது மார்ச் மாதத்தில் சனி அஸ்தமனமாவதால் அடுத்த 40 நாட்கள் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் அஸ்தமனமாகவுள்ளார். மேலும் இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சனி பகவான் அஸ்தமனமாவதால், அடுத்த 40 நாட்கள் சனியின் மோசமான விளைவுகள் குறையும். குறிப்பாக ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். இதுவரை வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் குறையும். சிந்தனையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காண்பீர்கள். வேலையில் கடினமாக உழைத்தால் நிச்சயம் இலக்குகளை அடைந்து வெற்றியைப் பெறலாம். முக்கியமாக பல வழிகளில் இருந்து பணம் தேடி வந்து குவியும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி பகவான் அஸ்தமனமாகவுள்ளார். ஏற்கனவே இந்த ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி நடந்து வருகிறது. இந்நிலையில் சனி அஸ்தமனமாவதால் இந்த ராசிக்காரர்கள் இதுவரை எதிர்கொண்ட சவால்கள் முடிவுக்கு வரும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். மன அழுத்தம் குறையும்.
ஒவ்வொரு வேலையையும் பொறுமையாகவும், அமைதியாகவும் அணுகினால் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வேலையில் இந்த பிரச்சனைகள் மற்றும் கவலைகள் நீங்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்களின் கௌரவம் அதிகரிக்கும்.
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்து, இக்காலத்தில் தொடங்கினால் நல்ல லாபத்தைப் பெறலாம். போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பீர்கள். முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறக்கூடும்.
நிதி ரீதியாக நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் தீரும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனக்கசப்புகள் தீரும். உறவுகள் வலுவடையும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி பகவான் அஸ்தமனமாகவுள்ளார். ஏற்கனவே இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் சனி அஸ்தமனமாவதால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். புதிய நட்புகள் கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறனை பாராட்டுவதோடு, புதிய பொறுப்புக்களையும் ஒப்படைக்கலாம். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
வாழ்க்கையில் உள்ள சிரமங்கள் குறைந்து, மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட கால குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். கூட்டுதொழில் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக சந்தித்து வந்த உடல்நல பிரச்சனைகள் குறைந்து, ஆரோக்கியம் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


