Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
30 ஆண்டுகளுக்குப் பின் மீனம் செல்லும் சனி பகவான்.. ஏழரை சனி யாருக்கு? என்ன பாதிப்பு வரும்?
Sani Peyarchi Palangal 2025: சனிபகவான் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நிகழும் மங்களகரமான குரோதி ஆண்டு 2025 ஆம் வருடம் மார்ச் மாதம் 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். கிரகங்களின் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர்.
நீதிமான் சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் பயணிப்பார். இவர் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிப்பதால், சனியின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் அதிகமாக இருக்கும். தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். ஆனால் இந்த ஆண்டில் சனி பகவான் குரு பகவானின் மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.

மீன ராசியில் சனி நுழையும் போது, சில ராசிக்காரர்கள் சனியின் பிடியில் இருந்து விடுபடுவார்கள். மேலும் சில ராசிக்கார்களுக்கு ஏழரை சனி தொடங்கி, வாழ்க்கை சிரமம் நிறைந்ததாக இருக்கப் போகிறது. 30 ஆண்டுகளுக்குப் பின் மீனம் செல்லும் சனி பகவானால், எந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கவுள்ளது மற்றும் அதன் பாதிப்பு ஏப்படி இருக்கும் என்பது குறித்து ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி என்ன சொல்கிறார் என்று தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி முதல் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. இந்த சனி பெயர்ச்சியின் போது சனி பகவான் 12 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த சனிப் பெயர்ச்சிக்கு பின் மேஷ ராசிக்காரர்கள் எந்த வேலையை தொடங்கும் போதும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முதலீடு செய்வது நல்லது. இதுநாள் வரை லாப சனியாக இருந்து நிறைய வருமானத்தை கொடுத்திருப்பார். 2025 ஆம் ஆண்டு முதல் விரைய சனியாக மாறுகிறார்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! கடந்த 2018 ஆம் ஆண்டு முதலே ஏழரை ஆண்டு காலமாக சனிபகவானின் பிடியில் இருந்து அல்லல்பட்டு துயரப்பட்டு வந்திருப்பீர்கள். இனி 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சங்கடங்கள் தீரும் காலம் வந்து விட்டது. இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். அதாவது சனியின் பிடியில் இருந்து விடுதலை பெற்று, வாழ்க்கையில் சந்தோஷத்தை அனுபவிக்கப் போகிறீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! 2025 ஆம் ஆண்டு மார்ச் முதலே ஜென்ம சனி விலகப்போகிறது. இந்த சனி பெயர்ச்சிக்கு பின் சனி பகவான் 2 ஆவது வீட்டிற்கு செல்கிறார். உங்கள் தலையில் அமர்ந்திருந்த சனி ராசியை விட்டு விலகப்போகிறார். பாதசனி என்பதால் இரண்டரை வருடத்தை எளிதாக கடந்து விடலாம். உங்கள் ராசிநாதன் சனிபகவான் உங்களை விட்டு விலகும் காலத்தில் இரண்டரை ஆண்டு காலம் நிறைய அள்ளித்தரப் போகிறார்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இரண்டரை ஆண்டு காலம் ஜென்ம சனி காலமாகும். இந்த சனி பெயர்ச்சியின் போது சனி பகவான் முதல் வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த மீன ராசிக்காரர்களுக்கு மார்ச் முதல் மன உளைச்சல் அதிகரிக்கும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. மொத்தத்தில் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











