Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
குரு சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு வெற்றிகள் குவியும்...
Gajkesari Rajyog On 26 February 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகம் தான் குரு பகவான். இந்த குரு பகவான் தேவர்களின் குருவாக கருதப்படுகிறார். இப்படிப்பட்ட குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். மேலும் இந்த குரு பகவான் ஒரு ராசியில் 12 மாதம் வரை இருப்பார். இப்படி ஒரு ஆண்டு காலம் ஒரு ராசியில் இருப்பதால், இவர் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார்.
அந்த வகையில் தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் ஜூன் 02 ஆம் தேதி வரை இருப்பார். இந்நிலையில் பிப்ரவரி 26 ஆம் தேதி மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மிதுன ராசியில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தால் அதிர்ஷ்டம், நிதி உயர்வு மற்றும் கௌரவம் போன்றவை கிடைக்கும். அதோடு லட்சுமி தேவியின் ஆசியும் கிடைக்கும்.

வேத நாட்காட்டியின் படி, சந்திரன் பிப்ரவரி 26 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழையும் சந்திரன், இந்த ராசியில் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை இருந்து கடக ராசிக்குள் நுழைவார். சுமார் 54 மணிநேரம் குரு பகவானுடன் ஒன்றாக சந்திரன் பயணிக்கவுள்ளார். இப்போது குரு சந்திரன் சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முடிவெடுக்கும் திறன்கள் மேம்படும். வேலை மற்றும் வணிகம் தொடர்பான விஷங்களில் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். எதிலும் அனுபவசாலிகளின் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் கௌரவம் அதிகரிக்கும். உங்களின் கருத்துக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். நிதி நிலைமை வலுபெறும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். இது எதிர்காலத்தில் நன்மையைத் தரும்.
மகரம்
மகர ராசியின் 6 ஆவது வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மையைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
பணியிடத்தில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இருப்பினும் உணவு விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலைமை வலுவடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. மன அமைதி மேம்படும்.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். செலவுகள் கட்டுப்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும்.
ஆன்லைன் வணிகம், டிஜிட்டல் மீடியாவில் உள்ளவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மொத்தத்தில் தனிப்பட்ட வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications