Latest Updates
-
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
30 ஆண்டு கழித்து மீனத்தில் உருவாகும் சக்திவாய்ந்த யோகம்: இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது..
Trigrahi Yog In Pisces 2026: வேத ஜோதிடத்தின் படி, மார்ச் மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இதனால் ஏராளமான யோகங்களும் உருவாகவுள்ளன. அதில் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில், அதுவும் மார்ச் 02 ஆம் தேதி அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த மீன ராசியில் ஏற்கனவே நீதிமான் சனி பகவான் பயணித்து வருகிறார். அதுவும் 30 ஆண்டுகள் கழித்து சனி பகவான் இந்த ராசியில் பயணித்து வருகிறார். அதைத் தொடர்ந்து மார்ச் 15 ஆம் தேதி கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மீன ராசியில் மார்ச் 15 முதல் சனி, சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் தங்களின் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல லாபத்துடன், வளர்ச்சியையும், வெற்றியையும் காண்பார்கள். இப்போது மீன ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன், சனி, சுக்கிரனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் தங்களின் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சூரியன், சனி, சுக்கிரனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தலைமைத்துவ திறன்கள் மேம்படும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சூரியன், சனி, சுக்கிரனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மேலும் புதிய பொறுப்புக்களும் கிடைக்கும்.
நிதி நிலைமை வழக்கத்தை விட வலுவாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
