For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா? அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...

நைட் ஷிப்ட் வேலைகள் உடலின் இயற்கை கடிகாரத்தின் செயல்பாட்டை சீர்குலைப்பதால், நாம் நினைத்திராத பல ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வைக்கிறது.

|

தற்போது பல துறைகளில் நைட்-ஷிப்ட் பொதுவான ஒன்றாக உள்ளது. சொல்லப்போனால் பலரது வாழ்க்கையே நை-ஷிப்ட்டில் தான் போகிறது. ஆனால் சில ஊழியர்கள் டே-ஷிப்ட், நைட்-ஷிப்ட் என்று மாறி மாறி வேலை செய்வதால், பல ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்படுகிறார்கள். அனைவரும் தூங்கும் இரவு நேரத்தில் வேலை செய்வதால், இயற்கைக்கு எதிராக உடலின் செயல்பாடுகள் இருப்பதால், அதன் விளைவாக பல அபாயகரமான நோய்களால் பாதிக்கப்பட நேரிடுகிறது.

Night-shift Jobs Can Lead to These Deadly Diseases

நைட் ஷிப்ட் வேலைகள் உடலின் இயற்கை கடிகாரத்தின் செயல்பாட்டை சீர்குலைப்பதால், நாம் நினைத்திராத பல ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வைக்கிறது. நீங்கள் நைட்-ஷிப்ட்டில் வேலை செய்பவரா? அப்படியானால் உங்களுக்கும் இப்பிரச்சனையெல்லாம் வர வாய்ப்புள்ளது. சரி, இப்போது நைட்-ஷிப்ட்டில் வேலை செய்வோரைத் தாக்கும் அபாயகரமான பிரச்சனைகள் எவையென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

ஜப்பானிய ஆய்வு ஒன்றில் நைட்-ஷிட் வேலை பார்ப்போரில் 50 சதவீதத்தினருக்கு சர்க்கரை நோயின் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 16 மணிநேரத்திற்கும் அதிகமாக வேலை செய்வோருக்கு சர்க்கரை நோயின் அபாயம் உள்ளது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, இது வளர்சிதை மாற்ற குறைபாடுகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது.

தூக்கமின்மை

தூக்கமின்மை

ஒழுங்கற்ற வேலை ஷிப்ட்டுக்கள் தூக்க முறைகளை சீர்குலைக்கும் மற்றும் தூக்கத்தை இழக்கச் செய்யும். பொதுவாக உடலின் இயற்கை கடிகாரத்திற்கு எதிராக செயல்படும் போது ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். அதிலும் நைட்-ஷிப்ட்டில் வேலை செய்தால், ஒருவரது ஆரோக்கியம் மட்டுமின்றி, சிறப்பாக செயல்படும் ஆற்றலும் பாதிக்கப்படும். மேலும் நைட்-ஷிப்ட்டில் வேலை செய்வோர் கவனக் குறைவாக இருக்கக்கூடும்.

மன இறுக்கம்

மன இறுக்கம்

நைட்-ஷிப்ட் மன இறுக்கத்திற்கான அபாயத்தை அதிகரிக்கும். ஏனெனில் இரவு நேரத்தில் கிர்காடியன் அமைப்பின் இயற்கை செயல்பாட்டிற்கு இடையூறை உண்டாக்கும் வகையில் வேலை செய்வதால் மன இறுக்கம் அதிகரிக்கும். மேலும் இது சந்தோஷத்தைக் பாழாக்கும் வகையில் குறிப்பிட்ட சில சமூக பிரச்சனைகளை உண்டாக்கி, நெருக்கமானவர்களை விட்டு விலகி இருக்கச் செய்யும்.

உடல் பருமன்

உடல் பருமன்

உடல் பருமன் ஆவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மோசமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. லெப்டின் என்னும் ஹார்மோன் பசியுணர்வை சீராக தூண்டுவதற்கு உதவும். முக்கியமாக லெப்டின் இரவு நேரத்தில் குறைவாக சுரப்பதால், இரவு நேரத்தில் அதிகமாக பசி எடுத்து, கட்டுப்பாடு இல்லாமல் அதிகமாக உணவை உண்ண வைக்கும். இதன் விளைவாக உடல் பருமன் அதிகரிக்கும்.

இதய நோய்

இதய நோய்

பல வருடங்களாக பல்வேறு ஆய்வுகளில் நைட்-ஷிப்ட் வேலைக்கும், இதய நோய்க்கும் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டு வருகிறது. அதில் ஒரு ஆராய்ச்சியில் நைட்-ஷிப்ட் வேலை இதய நோயின் அபாயத்தை 40 சதவீதம் அதிகரிப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரைப்பை குடல் நோய்கள்

இரைப்பை குடல் நோய்கள்

ஒழுங்கற்ற ஷிப்ட்டுக்களில் வேலை செய்தால், குறைந்த காலத்தில் பெரிய ஆரோக்கிய பிரச்சனையின் தாக்கத்திற்கு உள்ளாகக்கூடும். அதில் உடல் களைப்பு மட்டுமின்றி, வயிற்று உப்புசம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற இரைப்பைக் குடல் நோய்களை உண்டாக்கும். ஆனால் சரியாக கவனித்து சிகிச்சை மேற்கொண்டால், சிறிய பிரச்சனைகள் தீவிரமாவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Night-shift Jobs Can Lead to These Deadly Diseases

Night-shift jobs can disrupt the functioning of the natural clock of the body, making us prone to some major health issues including cardiovascular diseases, diabetes, insomnia, gastrointestinal diseases, and many more. Read on...
Story first published: Saturday, September 21, 2019, 18:35 [IST]
Desktop Bottom Promotion