Latest Updates
-
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை! -
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா? -
சனி மங்கள யோகம்: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 03 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
கரும்புள்ளிகளை சாதாரணமா நினைக்காதீங்க.. அது கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்..
Dark Spots And Liver Problem: பொதுவாக சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் அழகு சார்ந்த ஒரு பிரச்சனையாகவே கருதப்படுகின்றன. இந்த கரும்புள்ளிகளானது முகம், கை, தோள்பட்டைகள், முதுகு போன்ற பகுதிகளில் கருப்பு நிற புள்ளிகள் போன்று இருக்கும். இதனால் பலரும் இதை தீங்கற்றவையாக கருதி சாதாரணமாக நினைத்து விட்டுவிடுகின்றனர்.
கரும்புள்ளிகள் பெரும்பாலும் தீங்கற்றவை மற்றும் அவை புற ஊதாக்கதிர்களுடன் தொடர்புடையவை. ஆயினும் சமீபத்திய ஆய்வு ஒன்றில், சரும நிறமியில் ஏற்படக்கூடிய மாற்றங்களானது மிகவும் முக்கியமான உள்ளுறுப்பான கல்லீரல் பிரச்சனையின் ஒரு எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.

நமது உடலில் கல்லீரல் மிகவும் முக்கியமான உறுப்பாகும். இந்த கல்லீரல் நச்சுக்களை வடிகட்டுவது, பித்த நீரை உற்பத்தி செய்வது, ஹார்மோன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை மெட்டபாலிசம் செய்வது போன்ற முக்கியமான பணிகளை செய்கிறது. இப்படிப்பட்ட கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகளை, நமது சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள் கொண்டே கண்டறியலாம்.
அப்படி கண்டறிந்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து, ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொள்ளலாம். இப்போது சருமத்தில் வரும் கரும்புள்ளிகளுக்கும், கல்லீரல் பிரச்சனைகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் பற்றி காண்போம்.
கரும்புள்ளிகள் என்றால் என்ன?
கரும்புள்ளிகள் பெரும்பாலும் சூரியனின் புற ஊதாக்கதிர்களுடன் தொடர்புடையது என்றாலும், மறுபுறம் கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதுவும் ஹைப்பர்பிக்டென்டேஷன் என்பவை திசுக்களை சுற்றியுள்ள பகுதியை விட தோலின் பகுதி மிகவும் கருமையாக இருப்பதைக் குறிக்கிறது.
பெரும்பாலும் இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு அல்லது நச்சுக்களின் தேக்கத்தினால் ஏற்படுகிறது. உதாரணமாக நாள்பட்ட கல்லீரல் நோய்களுக்கும், ஹைப்பர்பிக்மென்டேஷனுக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆய்வுகளும் உள்ளன. அதுவும் நாள்பட்ட கல்லீரல் நோய் உள்ள நோயாளிகளின் முகத்தில் பெரும்பாலும் அதிகப்படியான நிறமி இருப்பதை ஆய்வுகளும் எடுத்துக்காட்டியுள்ளன.
வயது சார்ந்த கரும்புள்ளிகள்
வயது சார்ந்த கரும்புள்ளிகள், கல்லீரல் தொடர்பான கரும்புள்ளிகளில் இருந்து வேறுபட்டவை. அதை அவற்றின் தோற்றம், தொடக்கம், தொடர்புடைய அறிகுறிகள் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டு அறியலாம். அதே வேளையில் வயது சார்ந்த கரும்புள்ளிகள் பல ஆண்டுகளாக படிப்படியாக உருவாகும். மேலும் பெரும்பாலும் வெயில் படும் இடங்களான கைகள் மற்றும் முகத்தில் இந்த கரும்புள்ளிகள் தென்படும்.
மேலும் இவை மென்மையாகவும், தட்டையாகவும், ப்ரௌன் நிறத்திலும் மற்றும் வேறு எந்த ஒரு அறிகுறிகளுடனும் சேர்ந்து இருக்காது. அதுவே, கல்லீரல் தொடர்பான கரும்புள்ளிகள் பெரும்பாலும் திடீரெனத் தோன்றி, பரவலாகக் காணப்படலாம். முக்கியமாக இந்த கரும்புள்ளிகள் முகம், கழுத்து, உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் மற்றும் சில சமயங்களில் நாக்கு ஆகிய பகுதிகளிலுல் இவை பொதுவாகத் தோன்றும்.
ஹார்மோன் சமநிலையின்மை கல்லீரல் பிரச்சனைகளை உருவாக்கும்
கல்லீரல் தான் ஹார்மோன்களை வளர்சிதை மாற்றம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எப்போதெல்லாம் கல்லீரல் பாதிக்கப்படுகிறதோ, அப்போது ஹார்மோன் வெளியேற்றம் குறைகிறது. இப்படி ஹார்மோன் குறைவாக சுரக்கும் போது, அது மெலனின் உற்பத்திக்கு தேவையான மெலனோசைட்டுகள் எனப்படும் செல்களை அதிகப்படியாகத் தூண்டுகிறது. இந்த சரும நிறத்தைக் கொடுக்கும் மெலனோசைட்டுகள் அதிகப்படியாகத் தூண்டப்படும்போது, அவை சருமம் கருமையாவதற்கும், சீரற்ற திட்டுகளுக்கும் வழிவகுக்கின்றன.
சிறுநீரக செயலிழப்பு மற்றும் நச்சு தேக்கம்
கல்லீரல் பலவீனமாக இருந்தால், இரத்தத்தில் இருந்து நச்சுக்களை திறம்பட பிரித்தெடுக்க முடியாமல் போகும். இரத்தத்தில் நச்சுக்கள் அதிகம் இருந்தால், அது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தூண்டக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த ஆக்ஸிஜனேற்ற அழுத்தமானது செல்களைச் சேதப்படுத்தி, மெலனோசைட்டுகளைச் செயல்படுத்தி, கரும்புள்ளிகளை வரத் தூண்டுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

