Latest Updates
-
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் அழகிய நகரம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
ராகு-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம்: இந்த 3 ராசிக்காரங்க சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போறாங்களாம்
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
ஆகஸ்ட் மாதத்தில் பல சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாகப்போகின்றன. இந்த ராஜயோகங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. ஆகஸ்ட் மாதம் குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு மாறப்போகிறார், குருபகவானின் இந்த ராசி மாற்றம் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகத்தை உருவாக்கப்போகிறார்.

ஹன்ஸ் மகாபுருஷ யோகம் சக்திவாய்ந்த பஞ்ச யோகங்களில் ஒன்றாகும், இந்த யோக காலம் அக்டோபர் மாதம் வரை நீடிக்கும். இந்த யோகம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் நன்மைகளை வழங்கினாலும் சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் கூடுதல் நன்மைகளை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
ஹன்ஸ் மகாபுருஷ யோகம் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. இந்த யோகத்தால் அவர்களின் வருமானம் இரட்டிப்பாகும். அவர்கள் விரும்பும் அனைத்தையும் அடைய இது சரியான நேரமாகும். இந்த நேரத்தில், அவர்களின் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் நிகழப்போகிறது. திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பொருளாதாரரீதியாகவும் இந்த நிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிதி நிலைமையும் மேம்படும். அவர்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான காலகட்டத்தை அனுபவிக்க முடியும்.
சிங்கிளாக இருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பொருத்தமான துணை கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் அனைத்து வகையான நன்மைகளையும் அடையும் நேரமிது. காதலில் இருப்பவர்களுக்கு இது ஒரு சாதகமான காலகட்டமாகும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு இந்த காலகட்டம் பொருத்தமானதாக இருக்கும். பெரிய ஆரோக்கிய பிரச்சினைகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மகத்தான மாற்றங்களைத் தரப்போகிறது. குருபகவானின் ஆசீர்வாதம் அவர்களின் கவர்ச்சியையும், ஆளுமையையும் மேம்படுத்துகிறது. நிர்வாகம் அல்லது மேலாண்மைத் துறைகளில் உள்ளவர்கள் பெரிதும் பயனடைவார்கள். முடங்கிக் கிடந்த திட்டங்கள் வேகம் பெறும் மற்றும் அவர்களின் திறன்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். அவர்களின் முதலீடுகள் அவர்களுக்கு எதிர்பார்த்த லாபத்தைக் கொடுக்கும், மேலும் புதிய ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் ஈட்ட ஏராளமான வாய்ப்புகள் இருக்கும். அதே நேரத்தில் குடும்ப வாழ்க்கையும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
வேலையில் இருப்பவர்களுக்கு, பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. வியாபாரிகள் புதிய நகர்வுகள் மூலம் லாபம் சம்பாதிக்கலாம், அதேசமயம் வியாபாரத்தை புதிய இடங்களில் விரிவுபடுத்தலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் எந்த பெரிய உடல்நலப் பிரச்சினையையும் சந்திக்க மாட்டார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் எதிர்பாராத நன்மைகளை அடையப் போகிறார்கள். இந்த காலகட்டத்தில் நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்வில் திருப்தி ஏற்பட வாய்ப்புள்ளது. ஹன்ஸ் மகாபுருஷ யோகம் உங்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை வழங்கக்கூடும், மேலும் உங்கள் சமூக அந்தஸ்தை அதிகரிக்கும். புதிய கார் அல்லது வீடு வாங்குவது பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால் அதற்கு இதுதான் சரியான காலம்.
திருமணமானவர்களுக்கு உங்கள் உறவில் அரவணைப்பும், புரிதலும் அதிகரிக்கும். நிதி நிலை மற்றும் மன நிம்மதி உங்கள் வாழ்க்கையில் மேலும் நிறைவை உணர உதவும். ஒட்டுமொத்தமாக, இந்த யோகம் உங்கள் வாழ்க்கையில் வெற்றி, ஸ்திரத்தன்மை மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரப்போகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு இந்த காலம் வெற்றிகளைக் கொடுக்கும் காலமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
