Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உங்க தோலில் இந்த மாற்றங்கள் தெரியுதா? அப்ப கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
Liver Problem Symptoms: நமது உடலில் கல்லீரல் மிகப்பெரிய மற்றும் நூற்றுக்கணக்கான அத்தியாவசிய பணிகளை செய்யும் முக்கியமான உறுப்பாகும். குறிப்பாக இந்த கல்லீரல் தான் இரத்தத்தில் இருந்து நச்சுக்களை பிரித்தெடுக்கும் பணியை செய்கின்றன. இப்படி சுத்தப்படுத்தும் வேலையை செய்யும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சிக்காமல், கண்ட உணவுகளை சாப்பிட்டு, மோசமான பழக்கங்களை கொண்டிருந்தால், நாளடைவில் கல்லீரலில் சேதத்திற்கும், கல்லீரல் நோய்களுக்கும் வழிவகுக்கும்.
என்ன தான் மருத்துவ துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், ஒரு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் மட்டுமே குணப்படுத்த முடியும். அதுவும் கல்லீரலில் பிரச்சனை அல்லது நோய் இருந்தால், அது குறிப்பிட்ட அறிகுறிகளை நமக்கு வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளை கவனித்து, மருத்துவரை அணுகி சிகிக்சை மேற்கொண்டால், விரைவில் சரிசெய்யலாம்.

கல்லீரலில் நோய் அல்லது பிரச்சனை ஏதேனும் இருந்தால், அதன் தாக்கம் சருமத்திலும் தெரியும். ஹார்வர்ட், ஸ்டான்ஃபோர்டு மற்றும் எய்ம்ஸ்-இல் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர், ஹெபடாலஜிஸ்ட் மற்றும் இண்டர்வென்ஷனல் எண்டோஸ்கோபிஸ்ட் டாக்டர் சௌரப் சேத்தி, எம்.டி., எம்.பி.எச்., அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கல்லீரல் நோயை உணர்த்தும் சருமத்தில் தெரியும் 4 விதமான அறிகுறிகள் பற்றி கூறியுள்ளார். அந்த அறிகுறிகளாவன:
1. மஞ்சள் காமாலை
சருமத்தின் நிறம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகரித்துள்ளது என்று அர்த்தம். கல்லீரலில் நோய் அல்லது பாதிப்பு இருந்தால் தெரியக்கூடிய முதன்மையான மற்றும் முக்கியமான அறிகுறி. ஏனெனில் கல்லீரல் தான் பிலிரூபினை செயல்படுத்துகிறது. எப்போது கல்லீரலால் இந்த பிலிரூபினை சரியாக செயல்படுத்த முடியவில்லையோ, அப்போது சரும நிறம் மஞ்சளாகவோ மற்றும் கண்கள் மஞ்சளாகவோ மாறும்.
2. ஸ்பைடர் ஆஞ்சியோமாஸ்
நமது உடலில் சிலந்தி வலைகளைப் போன்றே சிறிய அளவிலான இரத்த நாளங்கள், நமது முகம், கழுத்து அல்லது நெஞ்சு பகுதியில் இருக்கும். இவை ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிப்பதால் ஏற்படுகின்றன. அதுவும் கல்லீரலில் நோய் ஏற்படும் போது, இப்படியான சிலந்தி வலைகளைப் போன்ற இரத்த நாளங்களில் சருமத்தில் தெரியத் தொடங்கினால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
3. உள்ளங்கை சிவந்திருப்பது
திடீரென்று உள்ளங்கைகள் சிவந்தோ அல்லது வீங்கியோ காணப்படுகிறதா? அப்படியானால் கல்லீரல் சரியாக செயல்படாத காரணத்தினால், உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவுகளும், இரத்த ஓட்டமும் அதிகரித்திருக்கலாம். எனவே இந்த அறிகுறிகளை சந்தித்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
4. காரணமில்லாத சரும அரிப்பு
கல்லீரலில் நோய் இருந்தால், இரவு நேரத்தில் கடுமையான சரும அரிப்புக்களை சந்திக்க நேரிடும். இது சருமத்தில் பித்த உப்புக்கள் குவிவதால் ஏற்படலாம். எனவே இப்படியான சரும அரிப்பை சந்தித்தால், உடனே அதை கவனித்து சிகிக்கை எடுக்கத் தொடங்குங்கள்.
எனவே நண்பர்களே! உங்கள் சருமத்தில் இப்படியான அறிகுறிகளை நீங்கள் சந்தித்து வந்தால், அந்த அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டு வாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications